Connect with us

    அண்ணியாக வரப்போற பெண்ணை காதலித்த தனது தம்பியை போட்டுத் தள்ளிய அண்ணன்…!!

    Davangare murder

    Viral News

    அண்ணியாக வரப்போற பெண்ணை காதலித்த தனது தம்பியை போட்டுத் தள்ளிய அண்ணன்…!!

    தனக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை தம்பி காதலித்து வந்ததால், அண்ணன் தம்பியை படுகொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

    Davangare murder

    கர்நாடக மாநிலம் ஹரிஹராவை சேர்ந்த இப்ராஹிம் என்பருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

    மேலும் அவர்களுக்கு வரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அண்ணனுக்கு நிச்சயம் செய்யப்பட்ட அந்த பெண்ணை அவரது தம்பி அல்தாப் காதலித்து வந்துள்ளார்.

    மேலும் தான் காதலித்த பெண் தனக்கு அண்ணியாக வரப்போவதை நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்து உள்ளார்.

    இவர்களின் காதல் விசயம் சம்மந்தப்பட்ட மாப்பிள்ளையும், அண்ணனுமான இப்ராகிமிற்கு தெரிய வந்துள்ளது.

    இதனால் தனக்கென நிச்சயம் செய்யப்பட்ட பெண்மணி, தனக்கு கிடைக்காமல் சென்றுவிடுவார் என்ற அச்சத்தில் அல்தாப்பை கொலை செய்ய இப்ராஹிம் திட்டமிட்டுள்ளார்.

    கடந்த 18 ஆம் தேதியின் போது அண்ணன் – தம்பி இருவரும் திருமணத்திற்கு துணி எடுக்க சென்ற நிலையில், மகாலட்சுமி லே-அவுட் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருத்தி அல்தாப்பை இப்ராஹிம் தாக்கி கொலை செய்துள்ளார்.

    பின்னர், அவர் தனது செல்போனை ஸ்விச் ஆப் செய்து தலைமறைவாகியுள்ளார்.

    காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, இப்ராஹீமை கைது செய்துள்ளனர்.

    இப்ராஹீமை கைது செய்த காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!