Tamil News
தம்பி மனைவியுடன் உல்லாசமாக இருந்த அண்ணன்; நேரில் பார்த்த தம்பி; பிறகு நடந்த விபரீதம்…!
கோவை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பியே அண்ணனை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த வேலாந்தவளம் தம்பாகவுண்டன் பாளையம் என்ற இடத்தில் அரிசி குடோன் நடத்தி வந்தவர் ராமநாதன் (37).
இவரது மனைவி ராஜேஸ்வரி ( 22). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல் அரிசி குடோனுக்கு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு ராமநாதன் சென்றுள்ளார்.
குடோனுக்கு சென்ற ராமநாதன் மர்ம நபர்களால் ரத்த வெள்ளத்தால் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தகவல் அறிந்து ராமநாதனின் மனைவி ராஜேஸ்வரியும் அங்கு வந்தார்.
அவர் கொல்லப்பட்டு பிணமாக கிடந்த கணவரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
போலீசார் ராமநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் ராமநாதனை கொலை செய்தவர்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அவரது பெரியப்பா மகனான முருகன் (35) குடோனுக்கு வந்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, போலீசில் கூறுகையில்;- முருகனின் மனைவியுடன் ராமநாதனுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதனை அறிந்த முருகனும், அவரது உறவினர்களும் ராமநாதனை கண்டித்துள்ளனர்.
ஆனால், எவ்வளவு சொல்லியும் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் மதுரையில் இருந்து கோவைக்கு வந்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
