Viral News
காதலியை தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவிப்பதற்காக கிராமம் முழுக்க கரண்ட் கட் செய்த இளைஞர்..!!
பீகாரில் காதலியை தனிமையில் சந்திப்பதற்காக, கிராமம் முழுவதும் குறிப்பிட்ட நேரத்தில் மின் துண்டிப்பு செய்த எலக்ட்ரிஷியன் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள கணேஷ்புர் என்ற கிராமத்தில் அடிக்கடி இரவு நேரங்களில் இரண்டு முதல் மூன்று மணிநேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்திருக்கிறது.
ஆனால், சுற்றுவட்டாரத்திலுள்ள பிற கிராமங்களில் மின் வெட்டு பிரச்சனை ஏதுமில்லை.
ஆனால் கணேஷ்பூர் கிராமத்தில் மட்டும் தினமும் ஏற்பட்ட மின் தடையால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் பல மாதங்களாக குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மின்வெட்டு தொடர்வதால் சந்தேகமடைந்த மக்கள், அதிகாரிகளிடம் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.
அப்போது தெரியவந்த விசயம் தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள எலெக்ட்ரீஷியன் ஒருவர் தன் காதலியை இருட்டில் சந்திக்கப்பதற்காகச் கிராமம் முழுக்க கரண்ட் கட் செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அந்த எலெக்ட்ரீஷியனையும் அவரது காதலியையும் திட்டுமிட்டு கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
எலெக்ட்ரீஷியனை கிராம மக்கள் சரிமாரியாக அடித்து, மொட்டையடித்து தெருக்களில் நடக்கவிட்டுள்ளனர்.
இறுதியில் இருவருக்கும் கிராம மக்கள் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
