Tamil News
திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் இளம் ஜோடிக்கு நேர்ந்த சோகம்; கதறி அழுத பெற்றோர்..!!
திருமணம் நிச்சயக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்செட்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கி பலியாயினர். நீச்சல் தெரியாததால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி பகுதியில் சிவா(21) என்பவர் வசித்து வந்துள்ளார்.
மேலும் தேன்கனிக்கோட்டை அண்ணாநகரில் அபிநயா(19) என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவர்கள் 2 பேருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
உரிகம் பகுதியில் நடந்த திருவிழாவிற்காக அபிநயா சென்றிருந்தார். அங்கு வன அலுவலகம் பின்புறம் உள்ள தடுப்பணையில் அபிநயா குளிக்க சென்றார்.
அப்போது நீச்சல் தெரியாததால் அபிநயா தண்ணீரில் மூழ்கினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு சற்று தொலைவில் இருந்த சிவா ஓடி வந்து காப்பாற்றுவதற்காக தடுப்பணைக்குள் இறங்கினார்.
அபிநயாவை காப்பற்ற முயன்ற சிவாவும் தண்ணீரில் மூழ்கினார்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
இதனையடுத்து பொதுமக்கள் தடுப்பணையில் இறங்கி இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
