Connect with us

    கொரோனா பாதித்து விடும் என பயந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்ததில், 2 பேர் உயிரிழப்பு..!!

    Tamil News

    கொரோனா பாதித்து விடும் என பயந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்ததில், 2 பேர் உயிரிழப்பு..!!

    மதுரையில் கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் மூன்று வயது குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை அருகே உள்ள கல்மேடு எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் நாகராஜன், கூலி தொழிலாளி.

    இவரது மனைவி லட்சுமி (வயது 46). இவர்களது மகள்கள் அனிதா, ஜோதிகா (23), மகன் சிபிராஜ் (13).

    அனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென இறந்து விட்டார். ஜோதிகாவுக்கு திருமணம் ஆகிவிட்டது.

    அவர் தனது கணவர் வல்லரசு மற்றும் மகன் ரித்திஷ் (3) ஆகியோருடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நாகராஜன் இறந்துவிட்டார்.

    மகள் மற்றும் கணவர் அடுத்தடுத்து இறந்ததால் லட்சுமி வேதனை அடைந்தார். இதனால் ஜோதிகா தாய்க்கு ஆறுதலாக அவருடன் அவரது வீட்டில் மகனுடன் வசித்து வந்தார்.

    அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோதிகாவுக்கு சளி, காய்ச்சல் மற்றும் இருமல் இருந்துள்ளது.

    இதனால் அவர் அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்தார்.

    அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜோதிகா தனது தாயிடம் தெரிவித்துள்ளார். அதனை கேட்டு தாய் லட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.

    ஒரு வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்து விட் டால் அனைவருக்கும் வந்து விடுமே என்று அவர் அச்சம் அடைந்துள்ளார். தங்களது குடும்பத்தில் ஏற்கனவே 2 பேர் இறந்து விட்டதை நினைத்து லட்சுமி மற்றும் ஜோதிகா வேதனை அடைந்தனர்.

    கொரோனா வந்து குடும்பத்துடன் அவதிப்படுவதை விட குடும்பத்தோடு நிம்மதியாக இறந்து விடலாம் என்று ஜோதிகா தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

    அதற்கு தாய் லட்சுமியும் ஒப்புக் கொண்டார். நேற்று இரவு ஜோதிகா, அவரது தாய், தம்பி மற்றும் மகன் ஆகிய 4 பேரும் சாப்பிட்டு விட்டு படுக்க சென்றனர்.

    அப்போது ஜோதிகா மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும், 3 வயது சிறுவன் ரித்திஷ் மற்றும் சிபிராஜிக்கு வி‌ஷத்தை (சாணி பவுடர்) குடிக்க கொடுத்தனர். பின்பு ஜோதிகா மற்றும் அவரது தாயும் பூச்சி மருந்தை குடித்தனர். சற்று நேரத்தில் 4 பேரும் மயங்கி விழுந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை லட்சுமியின் வீட்டு கதவு வெகுநேரம் திறக்காமல் இருந்துள்ளது.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அதுகுறித்து சிலைமான் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடம் வந்து லட்சுமி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு ஜோதிகா மற்றும் அவரது மகன் ரித்திஷ் ஆகிய இருவரும் இறந்து கிடந்தனர்.

    ஜோதிகாவின் தாய் லட்சுமி மற்றும் தம்பி சிபிராஜ் ஆகிய இருவரும் உயிருக்கு போராடியபடி கிடந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்கள் 2 பேரும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து சிலைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!