Connect with us

    மூத்த மகள் காதல் திருமணம் செய்ததால், மனைவி, குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்த தந்தை…!!

    Family committed suicide

    Tamil News

    மூத்த மகள் காதல் திருமணம் செய்ததால், மனைவி, குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்த தந்தை…!!

    நாகை அருகே மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Family committed suicide

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கிராமத்தை அடுத்த புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி புவனேஸ்வரி.

    லட்சுமணன் அப்பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு தனலட்சுமி, வினோதினி, அக்ஷ்யா ஆகிய மூன்று பெண் குழந்தைகள்.

    மூத்த மகள் தனலட்சுமி நாகையில் உள்ள தனியார் முழு உடல் பரிசோதனை ஆய்வகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

    இந்த நிலையில், மூத்த பெண் தனலட்சுமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த லட்சுமணன், கடந்த 4 தினங்களாக டீ கடையை திறக்காமல் சோகமாக இருந்து வந்துள்ளார்.

    வழக்கமாக காலை 7 மணியாகியும், இன்றும் டீ கடை திறக்காததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் சத்தம் எழுப்பியதுடன், கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்வேளூர் போலீசார், வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது 4 பேர் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

    விசாரணையில், மேற்கொண்ட லட்சுமணன், மனைவி புவனேஸ்வரி மற்றும் இரண்டு மகள்கள் வினோதினி, அட்சயா ஆகியோரை குழவி கல்லை தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

    சம்பவ இடத்தில் நாகை எஸ்பி ஜவஹர் நேரில் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, நால்வரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!