Connect with us

    2 ஆண்டுகளாக அரசு கக்கூசில் இரண்டு பிள்ளைகள், மாமியாரோடு வாழ்ந்து வரும் பெண்; நெ.ஞ்சை உ.றைய வைக்கும் சோ.கம்..!!

    Viral News

    2 ஆண்டுகளாக அரசு கக்கூசில் இரண்டு பிள்ளைகள், மாமியாரோடு வாழ்ந்து வரும் பெண்; நெ.ஞ்சை உ.றைய வைக்கும் சோ.கம்..!!

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தனது 2 குழந்தைகள், மாமியாருடன் ஒரு சிறிய கழிப்பறையில் பெண் ஒருவர் வசித்து வருவது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பாலநகர் மண்டல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் தினக் கூலியாகப் பணியாற்றி வருகிறார்.

    சுஜாதாவின் கணவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இ.றந்து விட்ட நிலையில், தனி ஒரு ஆளாக நின்று தனது குடும்பத்தை அவர் கவனித்து வருகிறார்.

    இந்த நிலையில் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, தெலுங்கானா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக சுஜாதாவின் வீடு இ.டி.ந்து வி.ழுந்தது.

    இதனால் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன், சுஜாதா த.ஞ்.சம.டைந்தார். அங்கிருந்தும் சில நாட்களில் அவர்களை வெளியேறச் சொல்லியுள்ளனர்.

    அங்கிருந்து வெளியேறிய சுஜாதாவிற்கு எங்குச் செல்வது எனத் தெரியவில்லை.

    கு.ழ.ந்.தைகள் மற்றும் வயதான மாமியாரை வைத்துக் கொண்டு நடு ரோட்டில் நின்ற சுஜாதா, அதே பகுதியில், அரசு கட்டிய பொது கழிப்பறையில் த.ஞ்.சம் அடைந்தார்.

    தற்போது இரண்டு ஆண்டுகளாக அங்கு வசித்து வரும் அவர், மலம் கழிக்கும் பகுதியைக் கடப்பா கல் வைத்து ம.றைத்து வைத்துள்ளார். மேலும், அந்த கழிப்பறையில் சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர், அடுப்பு போன்ற பொருட்களையும் வைத்துள்ளார்.

    இதுகுறித்து க.ண்.ணீர் மல்கப் பேசிய சுஜாதா, ”தினமும் நானும் எனது மாமியாரும் கழிப்பறைக்கு வெளியே தான் தூங்குவோம். எனது இரண்டு பிள்ளைகள் மட்டும் உள்ளே தூங்குவார்கள். மழைக் காலம் வந்து விட்டால் எனக்குத் தூங்கா இரவு தான்.

    ஏதாவது மேற்கூரையின் கீழே அமர்ந்து கொண்டு எனது இரவை கழித்து விடுவேன். குழந்தைகளை மட்டும் படிக்க வைத்து ஆளாக்கி விட்டால் போதும்” எனக் கூறினார்.

    எங்களின் நிலைமை யாருக்கு புரியும். முதல்வர் வாக்குறுதி அளித்த இரு படுக்கை அறைகள் கொண்ட வீடு எங்கே என க.ண்.ணீர் மல்க தெரிவித்தார்.

    இதையடுத்து பஞ்சாயத்து நிர்வாகம் சுஜாதா வசித்து வந்த கழிப்பறைக்கு அருகிலேயே அவருக்கு வீடு கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது.

    வீடு கட்ட அடிக்கல் நாட்டு விழா கடந்த வியாழக்கிழமை நடந்தது. இன்னமும் அவர்கள் கழிப்பறையிலேயே குடி இருந்து வருகிறார்கள்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!