Connect with us

    பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகை ரங்கம்மாள் பாட்டி காலமானார்..!

    Rangammal Paati

    Cinema

    பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகை ரங்கம்மாள் பாட்டி காலமானார்..!

    தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் ரங்கம்மாள் பாட்டி.

    Rangammal Paati

    வடிவேலுவின் படங்களில் அடிக்கடி இவரை பார்த்திருக்கலாம்.

    இவர் தமிழ் திரைப்படங்களில் அவ்வபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் வரும் ஐநூறு ரூபாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.

    இவர் வறுமையில் வாடி வருவதாக கடந்த வருடங்களாகவே செய்தி வந்து கொண்டிருந்தது.

    அவர் மெரீனாவில் கர்ச்சீப் விற்றுக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தது.

    இந்நிலையில் இன்று அவர் உடல்நிலை மோசமாகி காலமானார்.

    இந்த செய்தி சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.

    எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி வடிவேலு வரை தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரங்கள் பலருடனும் அவர் நடித்து இருக்கிறார். வடிவேலுவுடன் அவர் நடித்த நாய்க்கடி காமெடி பெரிய அளவில் பேமஸ்.

    வறுமையில் வாடி வந்த அவர் தங்க இடம் இல்லாமல் வேறு ஒருவர் இடத்தில் தங்கி இருப்பதாகவும், தனக்கு உதவி செய்யும்படியும் அரசிடம் கடந்த மாதம் தான் கோரிக்கை வைத்து இருந்தார்.

    இந்நிலையில் தற்போது அவர் மரணமடைந்து இருக்கிறார்.

    ரங்கம்மா பாட்டி கோவை அன்னூர் பகுதியில் அவர் உறவினர் வீட்டில் தங்கி இருந்த நிலையில் காலமானார்.

    அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!