Connect with us

    பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி மீது கழன்று விழுந்த ஃபேன்..!

    Fan fallen down in exam hall

    Viral News

    பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி மீது கழன்று விழுந்த ஃபேன்..!

    ஆந்திராவில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது மாணவி மீது ஃபேன் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Fan fallen down in exam hall

    ஆந்திராவில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் சோமண்டிப்பள்ளியில் உள்ள விக்னன் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவ மாணவிகள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.

    அப்போது தேர்வு ஹாலில் ஓடிக் கொண்டிருந்த ஃபேன் திடீரென கழன்று தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவியின் மீது விழுந்தது.

    இதனால் அந்த மாணவிக்கு காயம் ஏற்பட்டது.

    உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அந்த மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதன்பின்னர் எந்த ஆபத்தும் இல்லை என்று அரசு மருத்துவர்கள் உறுதிசெய்த பிறகு தொடர்ந்து அந்த மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.

    தேர்வுக்கு பின்னர் மாணவிக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மாணவி நலமாக உள்ளார்.

    இதுகுறித்து பள்ளி தாளாளர் கூறுகையில்,

    தேர்வு மையம் அமைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கட்டடம் முழுவதும் உள்ள மின் வயர்கள், மின்விளக்குகள், மின்விசிறிகள் அனைத்தும் பழுதாகிவிட்டன.

    இனி ஒவ்வொரு அறையிலும் மின்விசிறிகள் சரி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!