Tamil News
கடை திறப்பு விழாவிற்கு சென்ற ஜிபி முத்துவை காண விஜய் அஜித்துக்கு இணையாக திரண்ட ரசிகர்கள்..!
டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் ஜிபி முத்து.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் இவர்.
இவரைப்பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்பது இல்லை அந்த அளவிற்கு தற்போது தனி ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டு இருக்கிறார்.
இவர் பேசும் ஸ்டைலும், நகைச்சுவையும் பலரையும் ரசிக்கவைக்கும், அதுவும் அடேய் செத்த பயலே நார பயலே என்ற டயலாக் தான் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது.
தற்போது இவர் படங்களில் கூட சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.
அவ்வளவு ஏன் காமெடி நடிகர் சதீஷ், சன்னி லியோன் இணைந்து நடித்துவரும் படத்தில் கூட இவர் நடித்து கொண்டிருக்கிறார்.
குறுகிய காலத்திலேயே இவர் மிகவும் பிரபலமானதால் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 6ன் முதல் போட்டியாளராக கலந்து கொண்டார் ஜி.பி.முத்து. ஆனால் இரண்டாவது வாரமே அவர் வீட்டிலிருந்து வெளியேறினார்.
தனக்கு பணம், புகழை விட குடும்பம்தான் முக்கியம் என்று கூறி மன அழுத்ததில் இருப்பதாகவும் தன்னை வெளியே அனுப்பும்படியும் தொடர்ந்து கூறி வந்ததால், இவரை வீட்டை விட்டு வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பு பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில் நேற்று கன்னியாகுமரிக்கு ஒரு டயர் கடைக்கு திறப்பு விழாவிற்கு சென்ற அவரை பார்ப்பதற்காக மிகப்பெரிய கூட்டமே திரண்டு இருந்தது.
முன்னணி நடிகர்களுக்கு இணையாக அந்த கூட்டம் திரண்டு இருந்தது. அந்த வீடியோவை ஜி.பி.முத்துவே யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
