Tamil News
பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை; கதறி அழுத மனைவி…!!
பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சமீப காலமாக பெண்கள், குழந்தைகள் மீது தொடர் பாலியல் வன்முறை செய்திகள் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளன.
இதில் பெரும்பாலும் பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களே அதிகம் பாலியல் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
இதில் பெண்களும், குழந்தைகளுமே பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் சென்னையில் பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியு ள்ளது.
சென்னையை அடுத்த புழல், வினாயகபுரம், காஞ்சி நகரைச் சேர்ந்தவர் சையத் சர்பிராஸ் நவாஸ்.
இவர் அப்பகுதியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி மனைவியும், மகளும் உள்ளனர்.
இந்நிலையில், தனது 14 வயது மகளிடம் நவாஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த விஷயத்தை மகள், தாயிடம் கதறி அழுது கூறியுள்ளார்.
மகள் கூறியதைக் கேட்ட தாய், உடனே புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விரைந்து சென்று புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நவாஸை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நவாஸ் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
பெற்ற மகள் என்று கூட பார்க்காமல், தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நவாஸ் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
