Connect with us

    இளம்பெண் ஒருவரை கொலை செய்தது தனது மகன் என்று தெரிந்ததும், ஆதாரத்துடன் போலீசில் பிடித்து கொடுத்த தந்தை..!!

    Criminal son

    Viral News

    இளம்பெண் ஒருவரை கொலை செய்தது தனது மகன் என்று தெரிந்ததும், ஆதாரத்துடன் போலீசில் பிடித்து கொடுத்த தந்தை..!!

    இளம்பெண் கொலை வழக்கில் தனது மகனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி தந்தை ஒருவர் போலீசாரிடம் கொடுத்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

    Criminal son

    மும்பையில் உள்ள மிஸ்குய்ட்டா பகுதியைச் சேர்ந்தவர் கேரல் (29). கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே,, கடந்த மாதம் 24-ம் தேதி தோழி ஒருவரை சந்திக்க போவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு கேரல் சென்றுள்ளார். ஆனால், இரவு 10 மணிக்கு மேலாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    எங்கு தேடியும் கேரல் கிடைக்காததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்,

    இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கேரலை தேடி வந்ததில், கடந்த 3ம் தேதி பல்கார் நகரில் உள்ள புதர் ஒன்றில் சடலமாக இருந்ததை கண்டறிந்தனர்.

    பிரேதப் பரிசோதனையில் அவர் அடித்துக் கொல்லப்பட்டிப்பது தெரியவந்தது.

    இதையடுத்து, கேரலை கொலை செய்தவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

    அவரது செல்போன் அழைப்புகள், வாட்ஸ் அப் தகவல்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் தீவிரமாக ஆராய்ந்தனர்.

    கடைசியாக ஜீக்கோ(வயது 27) என்பவருடன் அவர் பேசி இருந்தது தெரியவந்தது.

    அவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதே சமயத்தில், ஜீக்கோவின் தந்தையான அன்சேம், தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்துள்ளார்.

    அப்போது, சம்பவம் நடந்த தினமான ஜனவரி 24-ம் தேதி இரவு, தனது மகன் ஜீக்கோ, மோட்டார் சைக்கிளில் வெளியே செல்லும் காட்சி அதில் பதிவாகி இருந்தது.

    அதேபோல, ஜீக்கோ வீட்டில் மறைத்து வைத்திருந்த அவரது லேப்டாப்பையும் எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

    தனது மகன் தான் குற்றவாளி என்பதை உணர்ந்து கொண்ட அவர் தனது மகன் தான் குற்றவாளி என போலீசில் தெரிவித்து, அதற்கான ஆதாரங்களையும் போலீசில் ஒப்படைத்துள்ளார்.

    அதில் இருந்த சில ஆதாரங்களையும் அன்சேம் திரட்டியிருக்கிறார்.

    இதனையடுத்து ஜீக்கோவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், கேரலை காதலித்து வந்ததும், திருமணம் செய்து கொள்ளுமாறு அதிக அழுத்தம் கொடுத்த காரணத்தால் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.

    தன் மகன் தான் குற்றவாளி என்று தெரிந்ததும், தந்தையே போலீசில் மாட்டிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!