Connect with us

    தனது தோல்வியை கேக் வெட்டி, மகிழ்ச்சியுடன் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டாடிய வேட்பாளர்; ஏன் தெரியுமா..!

    Candidate seethe lakshmi

    Politics

    தனது தோல்வியை கேக் வெட்டி, மகிழ்ச்சியுடன் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டாடிய வேட்பாளர்; ஏன் தெரியுமா..!

    தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ளன.

    இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.

    தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்த தேர்தல் முடிவுகளில் பல்வேறு சுவாரசிய நிகழ்வுகளும் அரங்கேறியது.

    அந்த வகையில், தோல்வி அடைந்த வேட்பாளர் ஒருவர் தனக்கு வாக்களித்த மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடி வருகிறார்.

    Candidate seethe lakshmi

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் இருக்கின்றன.

    இதில், 29-வது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சீதாலட்சுமி 230 வாக்குகள் பெற்று டெபாசிட் தொகையை இழந்து, தோல்வியடைந்தார்.

    இந்த வார்டில் மொத்தம் 1,724 வாக்குகள் பதிவாகியிருந்தன. தி.மு.க வேட்பாளர் சுபாஷினி செல்வம் 1,226 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

    அ.தி.மு.க வேட்பாளர் பிரியங்காவும் 268 வாக்குகள் பெற்று, டெபாசிட் தொகையைப் பறிகொடுத்தார். மும்முனைப் போட்டியில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

    இருப்பினும், சீதாலட்சுமி தனக்கு ஓட்டுப்போட்ட வாக்காளர்களுக்கு வீடு, வீடாகச் சென்று நன்றி தெரிவித்து வருகிறார்.

    இது குறித்து வேட்பாளர் தரப்பில் கூறும் போது,

    அது. தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்கள் மாறி மாறி பணம் கொடுத்து ஓட்டு வாங்கினர்.

    சொல்லப்போனால் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் பிரமாண்ட வெற்றி பெற்றிருப்பது நாங்கள்தான்.

    அதன் காரணமாகத்தான் கேக் வெட்டி கொண்டாடினோம். எங்களை நம்பி பின்னால் வந்த வாக்காளர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!