Uncategorized
மாமனாரை கேவலமாக பேசிய மருமகன்; பதிவு திருமணம் செய்ய சார்பதிவாளர் வந்த இடத்தில் நேர்ந்த விபரீதம்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பதிவு திருமணம் செய்ய வந்த மணமகன், மணமகள் வீட்டார் இடையே அடிதடி சண்டை ஏற்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சந்தகொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியவாணி.
ஏ.கே.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்
இந்நிலையில், திருமணத்தை நேற்று பதிவு திருமணம் செய்வதற்காக பெண் வீட்டார் மற்றும் மணமகன் வீட்டார் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.
இந்த நிலையில் மணமகன் சாட்சி கையொப்பமிட மாமனாரை அழைக்கும்போது தனக்கு ஒரே மகள் என்ற காரணத்தால் கோபத்துடன் இருந்த மாமனார் வர மறுத்துள்ளார்.
அப்போது மணமகன் ஆவேசமாகவும் ஆபாசமாகவும் மானாரை பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தகப்பனார் மணப்பெண்ணை வெளியே அழைத்து சென்று வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார்.
அப்பொழுது மணமகன் வீட்டார் சண்டையில் ஈடுபட்டதால் கையில் கிடைத்த பொருட்களை எடுத்து தாக்கும் அளவிற்கு சண்டை ஏற்பட்டது.
அவர்களுக்காக பேசி சமாதானம் செய்து மணமகன் மாமனார் காலில் மன்னிப்பு கேட்டபிறகு மீண்டும் பதிவு திருமணம் நடந்தது.
இச்சம்பவத்தால் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
