Connect with us

    மீன் பிடித்து கொண்டிருந்தவரின் தொண்டைக்குள் சிக்கிய மீன்; எக்ஸ்ரேவில் டாக்டர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

    Fish lodged in man's throat

    World News

    மீன் பிடித்து கொண்டிருந்தவரின் தொண்டைக்குள் சிக்கிய மீன்; எக்ஸ்ரேவில் டாக்டர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

    தாய்லாந்து நாட்டில் குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தவரின் தொண்டைக்குள் மீன் சிக்கிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Fish lodged in man's throat

    தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் உள்ள நீர் நிலையில் ஒருவர் தூண்டிலில் மீன் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது தூண்டிலில் மீன் சிக்குவதற்கு பதிலாக ஒரு மீன் துள்ளி குதித்து அவரது தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.

    5 அங்குலம் நீளம் கொண்ட அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற முயற்சி செய்துள்ளது.

    இதனால் அவருக்கு மிகுந்த வலி ஏற்பட்டுள்ளது.

    மேலும் தொண்டைக்கும், சுவாச குழிக்கும் இடையே அந்த மீன் சிக்கிக் கொண்டதால் பிராணவாயு செல்லும் வழி அமைக்கப்பட்டது.

    இதனால் மூச்சு திணறிய அவர் தொண்டையை இறுகப் பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வந்துள்ளார்.

    பின்னர் அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது மீன் இருந்த இடம் கண்டறியப்பட்டு , அவசர கால அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    நீரில் இருந்து மீன் துள்ளிக்குதித்து ஒருவரின் தொண்டைக்குள் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அவரின் உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படாத வகையில் மருத்துவர்கள் அந்த நபரை காப்பாற்றியுள்ளனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!