World News
அடேங்கப்பா! எவ்ளோ பெரிய மீன்; மீனவரின் வலையில் சிக்கிய அதிசய மீன்..!
கம்போடியா நாட்டில் உள்ள மீகாங் ஆற்றில் 4 மீட்டர் நீளமும், 180 கிலோ எடையும் கொண்ட ராட்சத திருக்கை மீன் மீனவர் வலையில் சிக்கியது.
கம்போடியா நாட்டின் வடகிழக்கு மாகாணமான ஸ்டங் ட்ரெங்கின்-ல் இருக்கிறது மீகாங் நதி.
அங்குள்ள மக்கள் இந்த நதியில் மீன்பிடிப்பது வழக்கம்
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர், மீனவர் ஒருவர் வீசிய வலையில் மிகப்பெரிய stingray எனப்படும் திருக்கை மீன் சிக்கியுள்ளது.
இதனால் ஆச்சரியமடைந்த மீனவர் இந்த தகவலை அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.
உடனடியாக இந்த திருக்கை மீனை பார்வையிட சர்வதேச மீன் நிபுணர் குழுவினர் அந்தப் பகுதிக்கு வந்தனர்.
அப்போது மீனின் எடை மற்றும் அளவுகள் பரிசோதிக்கப்பட்டன. இதனையடுத்து அந்த மீன் 13 அடி அகலமும், 180 கிலோ எடையும் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திருக்கை மீன் மிகவும் அரியவகை என்பதால் மீண்டும் நீரிலேயே அதனை விட்டுவிடுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதன்படி அந்த மீன் மீண்டும் ஆற்றிலேயே விடப்பட்டது. அதிகாரிகள்
இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது:
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய stingray மீன் இதுதான்.
இந்த நதி பல்லாயிரக்கணக்கான உயிர்களின் ஆதாரமாக திகழ்கிறது.
அரியவகை மீனை மீண்டும் அதன் வாழ்விடத்திற்கு செல்ல அனுமதித்திருக்கிறோம்” என்றனர்.
இந்த மீன் பற்றிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
