Connect with us

    வீட்டிற்குள் விஷ வாயுவை (toxic gas) செலுத்தி தற்கொலை செய்து கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்; நெஞ்சை உருக்கும் சோகம்..!

    four of family commits suicide after inhaling toxic gas

    Tamil News

    வீட்டிற்குள் விஷ வாயுவை (toxic gas) செலுத்தி தற்கொலை செய்து கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்; நெஞ்சை உருக்கும் சோகம்..!

    கேரள மாநிலம் திருச்சூரில் வீடு முழுவதும் விஷ வாயுவை (toxic gas) நிரப்பி மென்பொறியாளர் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    four of family commits suicide after inhaling toxic gas

    திருச்சூர் மாவட்டம், கொடுங்கல்லூர், உழவத் கடவை சேர்ந்தவர் உபைது. இவருடைய மகன் ஆஷிக் (40). என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    இவரது மனைவி அபீரா (34). இவர்களது மகள்கள் அஸ்ரா பாத்திமா (14) மற்றும் அனோம் நிஷா பாத்திமா (8).

    இவர்கள் சந்தப்புராவிலுள்ள வீட்டில் வசித்து வந்தனர். கீழ் மாடியில் பெற்றோரும், மேல்மாடியில் இவர்களும் இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று நீண்ட நேரமாக இவர்கள் யாரும் அறையை விட்டு வெளியே வரவில்லை.

    இதையடுத்து ஆஷிக்கின் பெற்றோர் மேல் மாடிக்கு சென்று பார்த்தபோது அறைக் கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் திறக்கவில்லை.

    இதனால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது நான்கு பேரும் படுக்கையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருச்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து பார்த்தனர்.

    அப்போது வீட்டுக்குள் இருந்து நச்சுத்தன்மை உடைய வாயு வெளியேறியது.

    இதனால் போலீசாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே சுதாரித்து கொண்ட போலீசார் வெளியே சென்றனர்.

    பின்னர் வீட்டுக்குள் விஷவாயு படர்ந்து இருப்பதை உணர்ந்த அவர்கள் முதற்கட்டமாக அதனை வெளியேற்றும் முயற்சியில் இறங்கினர்.

    தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    அப்போது ஜன்னல் இடுக்குகளில் காற்று வெளியேறாதவாறு டேப் ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

    பின்னர் அதனையும் அகற்றி வீடு முழுவதும் பரவியிருந்த விஷ வாயுவை வெளியேற்றிய பிறகு போலீசார் வீட்டுக்குள் நுழைந்தனர்.

    நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் நான்கு பேரும் விஷவாயு சுவாசித்திருந்தது தெரியவந்தது.

    இதற்காக ஆஷிக் ஆன்லைனில் கால்சியம் கார்பனேட் மற்றும் சிங்க் ஆக்சைடை வாங்கியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    அறைக்கதவு மற்றும் ஜன்னல்களை பூட்டி பின்னர் விஷ வாயுவை செலுத்தி அவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

    விஷ வாயு வெளியேறாமல் இருப்பதற்காக அறையின் ஜன்னல் மற்றும் கதவுகளில் டேப்பை பயன்படுத்தி ஒட்டி வைக்கப்பட்டிருந்தது.

    ஆஷிக்குக்கு கடன்தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    உண்மையில் கடன் தொல்லை தானா? அல்லது குடும்பத்தில் வேறு ஏதாவது பிரச்னைகள் உண்டா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    மேலும் உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!