Connect with us

    பேஸ்புக்கில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இரு ஆண் நண்பர்கள்; குவியும் வாழ்த்துக்கள்..!!

    Gay couple

    Viral News

    பேஸ்புக்கில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இரு ஆண் நண்பர்கள்; குவியும் வாழ்த்துக்கள்..!!

    கொல்கத்தாவில் பேஸ்புக்கில் பழகிய இரு ஆண்கள் நாளடைவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Gay couple

    கொல்கத்தாவைச் சேர்ந்தவர் அபிஷேக் ரே. இவர் ஒரு பேஷன் டிசைனர்.

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு சைதன்யா சர்மா என்பவருடன் பேஸ்புக்கில் அறிமுகம் ஏற்பட்டது.

    ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாகப் பழகினர். பின்னர் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

    இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ முடியாது என்ற நிலைக்கு வந்தனர்.

    இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கோவாவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    தங்களின் திருமணத்தை இருவரும் எளிய முறையில் நடத்த திட்டமிட்டனர்.

    ஆனால் தன்பாலின திருமண விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்கும் வகையில் தங்களின் திருமணத்தைப் பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கின்றனர்.

    திருமணத்திற்காக அழைப்பிதழ்களும் அச்சடிக்கப்பட்டு நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.

    இவர்களின் திருமணம் கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    திருமணத்தில் வழக்கமாக நடக்கும் அனைத்து சடங்குகளும் சம்பிரதாயங்களும் நடத்தப்பட்டன.

    அக்னி சாட்சியாக திருமண உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

    திருமணம் இந்து முறைப்படி பெங்காலி மற்றும் மார்வாரி முறையில் நடந்தது.

    இத்திருமணத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு இந்த ஆண் ஜோடியை வாழ்த்தினர்.

    தங்களின் திருமணம் குறித்து அபிஷேக் கூறுகையில்,

    “நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது நமது திருமணம் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மறக்க முடியாததாக இருக்க வேண்டும் என்று சைத்ன்யாவிடம் தெரிவித்தேன்.

    இது போன்ற நிகழ்வுகளை எளிய முறையில் வீட்டிலேயே செய்து கொள்வர்.

    ஆனால் நாங்கள் அதிலிருந்து வித்தியாசமாக இருக்க விரும்பினோம்” என்று தெரிவித்தார்.

    இவர்கள் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    இந்தத் தன்பால் ஈர்ப்பு ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!