Connect with us

    வாக்கிங் போன மனைவியை காணாமல் தவித்த கணவர்; காணோம்; புகார் கொடுக்கப் போன இடத்தில் புதருக்குள் இருந்து கேட்ட செல்போன் சத்தம் 😲😲👇👇

    German couple

    World News

    வாக்கிங் போன மனைவியை காணாமல் தவித்த கணவர்; காணோம்; புகார் கொடுக்கப் போன இடத்தில் புதருக்குள் இருந்து கேட்ட செல்போன் சத்தம் 😲😲👇👇

    திருமண உறவிற்குள் ஏற்படும் சிக்கல்கள் சரியான நேரத்தில் தீர்க்கப்பட வேண்டும். இல்லையெனில் அவை கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும் ஆபத்துண்டு.

    இதேபோல, மனைவி மீது தொடர்ந்து சந்தேப்பட்டு வைத்த கணவனே, மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    German couple

    ஜெர்மனியின் ரைன் பகுதியில் வசித்துவருகிறார் பெட்ரிக்(27). இவருடைய மனைவி பெயர் ஜெனிஃபர் (27).

    தொழில்முறை பெயிண்டரான பெட்ரிக் ஆரம்பம் முதலே தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு தனது வீட்டிற்குள் திருடன் போல நுழைந்து, ஜெனிஃபரை கத்தியால் தக்க முயற்சி செய்திருக்கிறார் பெட்ரிக்.

    அப்போது, கையும் களவுமாக பிடிபட்ட பின்னர் தனக்கு திருந்தி வாழ வாய்ப்பு கொடுக்குமாறு பெட்ரிக் கேட்டுக்கொண்டதை அடுத்து, ஜெனிஃபரும் காவல்துறையில் இந்த விஷயத்தை தெரிவிக்காமல் விட்டு விட்டார்.

    இந்த நிலையில், தொடர்ந்து இருவருக்குள்ளும் சண்டை நடைபெற்று வந்திருக்கிறது.

    கடந்த மாதத்தில் ஒருநாள், காவல்துறைக்கு போன் செய்த பெட்ரிக், தனது மனைவி வாக்கிங் செல்வதாகச் சொல்லிவிட்டு சென்றதாகவும் ஆனால், அவரை காணவில்லை எனத் தெரிவித்து இருக்கிறார்.

    சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், கொஞ்ச நேரத்திலேயே ஜெனிஃபரின் உடலை அவர்களது வீடு இருந்த இடத்திற்கு கொஞ்ச தூரத்திலிருந்து மீட்டனர்.

    இதுகுறித்து பெட்ரிக் கைது செய்யப்பட்டு இருக்கிறார்

    ஆரம்பத்தில், தான் இந்த கொலையை செய்யவில்லை என பெட்ரிக் கூறி இருக்கிறார்.

    ஆனால், ஜெனிஃபரின் செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர் அதில் அதிர்ச்சி தரத்தக்க வகையில் ஒரு விஷயத்தை கண்டு பிடித்துள்ளனர்.

    கொலையும் செய்துவிட்டு ஜெனிஃபர் அனுப்புவது போலவே ஒரு குறுஞ்செய்தியை பெட்ரிக் ஜெனிஃபரின் தங்கைக்கு அனுப்பி இருக்கிறார்.

    ஆனால், ஜெனிஃபர் இறந்ததாக சொல்லப்படும் நேரத்திற்கு பின்னர் இந்த மெசேஜ் அனுப்பப்பட்டு இருந்ததால் சந்தேகப்பட்ட போலீசார் பெட்ரிக் -இடம் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

    பொறாமை, சந்தேகம் காரணமாக மனைவியை கொன்றுவிட்டு கணவனே போலீசில் புகாரளித்த விவகாரம் தற்போது ஜெர்மனி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!