Tamil News
கணவரின் கள்ளக்காதலியை வீட்டிற்கு வரவழைத்து, கை கால்களை கட்டிப்போட்டு, 4 இளைஞர்களை ஏவி பலாத்காரம் செய்ய வைத்த பெண்..!!
கணவனுடன் நெருக்கமாக பழகிய இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து அந்தப் பெண்ணை நான்கு இளைஞர்களை ஏவி பெண் கற்பழித்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த விவகாரம் 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காதலிப்பதாக நடித்து பெண்களை கற்பழிப்பது, காதலித்து பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுவது, காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசுவது,
காதலித்து திருமணம் செய்து பின்னர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது என் எண்ணற்ற கொடுமைகள் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வருகின்றது.
இது ஒருபுறமிருக்க தனது கணவனுடன் நெருங்கி பழகினார் என்பதற்காக இளம் பெண் மீது நான்கு ஆண்கள் ஏவி சக பெண்ணை கற்பழிப்பு செய்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் ஐடி லோகேஷன் என்று அழைக்கப்படும் கோண்டாபூரில் இந்த கொடூரம் நடந்துள்ளது.
காயத்ரி- ஸ்ரீகாந்த் தம்பதியர் ஸ்ரீராம் நகரில் வசித்து வருகின்றனர்.
ஸ்ரீகாந்துக்கு ஒரு இளம்பெண் ஒருவர் அறிமுகமானார். அவர்கள் இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்தனர்.
அவர்களுக்கு இடையில் உள்ள நெருக்கத்தைப் பார்த்த ஸ்ரீகாந்தின் மனைவி காயத்ரி தனது கணவனுடன் அந்த பெண்ணுக்கு கள்ளக்காதல் இருக்குமோ என சந்தேகித்தார்.
இதை உறுதி செய்யும் வகையில் பல முயற்சிகளை எடுத்தார்.
ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண் மீது ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்தின் மனைவி காயத்ரி அந்தப் பெண்ணை கொடூரமாக பழி வாங்க திட்டமிட்டார்.
இந்நிலையில் கணவருடன் பழகிய அந்த இளம்பெண்ணுக்கு போன் செய்த ஸ்ரீகாந்த் மனைவி காயத்ரி அந்தப் பெண்ணிடம் மிக அன்பாக பேசினார்.
அந்தப் பெண்ணை வீட்டுக்கு வருமாறு அழைத்தார் அதை நம்பி அந்தப் பெண்ணை வீட்டுக்கு வந்தார்.
முன்கூட்டிய காயத்ரி அவர்கள் வீட்டில் நான்கு இளைஞர்களை ஏற்பாடு செய்திருந்தார்.
வீட்டுக்கு வந்த பெண்ணை அறையில் தள்ளி, கட்டிலில் கட்டி வைத்து நான்கு இளைஞர்களும் மாறி மாறி பாலியல் வன்புணர்வு செய்தனர்.
தற்போது இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருமணமான பெண்ணை நம்பி வீட்டிற்கு வந்த இளம்பெண்ணை நான்கு இளைஞர்களை கொண்டு பெண் கற்பழித்ததுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதேநேரத்தில் கற்பழிப்பு செய்த அந்த இளைஞர்கள் அந்த பெண்ணை வீடியோ எடுத்தனர்.
அந்த வீடியோவை வைத்து ஸ்ரீகாந்தின் மனைவி காயத்ரி அந்தப் பெண்ணை பிளாக்மெயில் செய்து வந்தார்.
இந்நிலையில் அதன் சித்திரவதை தாங்க முடியாத அந்த இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஸ்ரீகாந்தின் மனைவி காயத்ரி உள்ளிட்ட 5 பேரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
