Tamil News
தமிழகமே கொந்தளிப்பு; உல்லாசமாக இருந்த வீடியோவை வைத்து 22 வயது பெண்ணை 6 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்த திமுக நிர்வாகி உட்பட 8 பேர்…!!
உல்லாசமாக இருந்த வீடியோவை வைத்து 22 வயது பெண்ணை 6 மாதமாக திமுக நிர்வாகி உட்பட 8 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் 22 வயது பெண்ணுக்கு மேலரத வீதியை சேர்ந்த திருமணம் ஆன திமுக பிரமுகர் ஹரிஹரனுடன் பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் காதலாக மாறி, இருவரும் தனிமையில் சந்திக்க தொடங்கினர்.
அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார்.
அவ்வாறு ஒரு நாள் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த போது அந்த பெண்ணுக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்ததை ஹரிஹரன் வீடியோ எடுத்தார்.
இதையடுத்து தனது நண்பரான திமுக நிர்வாகி ஜீனைத் அகமது, பிரவீன் மற்றும் அதே தெருவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் என 6 பேருக்கு அந்த வீடியோவை காட்டியுள்ளார்.
இதையடுத்து அந்த வீடியோவை வைத்து 22 வயது இளம்பெண்ணை 7 பேரும் மாறி மாறி கடந்த 8 மாதங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளதாக தெரிகிறது.
நாளுக்கு நாள் இவர்களின் தொல்லையை தாங்க முடியாத அந்த பெண் தன் வீட்டருக்கே உள்ள மாடசாமி என்பவரிடம் நடந்ததை கூறியுள்ளார்
அவர் காப்பாற்றுவார் என நினைத்த நிலையில் அவரும், அந்த வீடியோவை 7 பேரிடம் இருந்து பெற்றுக் கொண்டு அந்த பெண்ணை தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
இப்படியே மாதங்கள் கடந்தும் இவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்ததை அடுத்து அந்த பெண் போலீஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸார் திமுக நிர்வாகிகளான ஹரிஹரன், ஜீனைத் அகமது, பிரவீன், மாடசாமி, 4 பள்ளி மாணவர்கள் (10, 11 ,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்) ஆகியோரை கைது செய்தனர்.
