Connect with us

    எலியை கொல்ல மருந்து கலந்து வைக்கப்பட்ட கேரட்டை; தெரியாமல் எடுத்து சமைத்து சாப்பிட்ட மாணவி உயிரிழந்த பரிதாபம்..!!

    Girl died after eat rat poison mixed carrot

    Tamil News

    எலியை கொல்ல மருந்து கலந்து வைக்கப்பட்ட கேரட்டை; தெரியாமல் எடுத்து சமைத்து சாப்பிட்ட மாணவி உயிரிழந்த பரிதாபம்..!!

    பொள்ளாச்சி அருகே எலியை கொல்ல எலி மருந்த (rat poison) தடவி வைத்த காய்கறிகளை சமைத்துச் சாப்பிட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    Girl died after eat rat poison mixed carrot

    கோவை மாவட்டம், செட்டிக்கா பாளையத்தைச் சேர்ந்தவர் தேவசித்து. இவரது மனைவி கிரேஷி அம்மாள். இந்த தம்பதிக்கு ஜாக்குலின் என்ற ஒரு மகள் உள்ளார்.

    தேவசித்து அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி தேவசித்தின் மகள், கல்லூரி மாணவியான எனிமா ஜாக்குலின் கடையில் இருந்த கேரட்டை எடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளார்.

    சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து மயக்கமடைந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் கிரேஷி அம்மாள் உடனே மகளை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவியின் நிலை கவலபலனின்றிக இருப்பதாகக் கூறி அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஜாக்குலினின் தந்தை தான் நடத்தி வரும் மளிகைக்கடையில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் காய்கறிகளில் எலி மருந்து வைத்துள்ளார்.

    இதனை அறியாத ஜாக்குலின் அந்த காய்கறியை சமைத்து சாப்பிட்டதால் தான் உயிரிழந்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    எலிக்காக வைக்கப்பட்டிருந்த கேரட்டை எடுத்து சாப்பிட்டதில் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

     

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!