Tamil News
“அவர் பக்கத்திலேயே என்னையும் அடக்கம் செய்யுங்க ப்ளீஸ்” – விபத்தில் இறந்த காதலன் பிரிவை தாங்க முடியாமல், விரக்தியில் காதலி எடுத்த சோக முடிவு…!!
சாலை விபத்தில் இறந்த காதலனை நினைத்து மனமுடைந்த காதலியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே உள்ள மஸ்கல் கிராமத்த சேர்ந்தவர் தனுஷ்.
இவர் துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இவரும், ஆரஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுஷ்மா என்ற பெண்ணும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் உறவினர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனுஷ் கடந்த 11ஆம் தேதி கோவில் திருவிழாவிற்கு செல்ல காரில் சென்றுள்ளார்.
அப்போது, கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது நிலமங்களா என்ற பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று தனுஷின் காரில் மோதியுள்ளது.
இதனால் பலத்த காயமடைந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த தனுஷின் உறவினர்கள் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, காதலனின் பிரிவை தாங்க முடியாமல் தனிமையில் இருந்த சுஷ்மா, வீட்டில் வைத்திருந்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சாகும் முன்னர் அவர் எழுதிய கடிதத்தில் தனுஷை பிரிந்து தன்னால் வாழ முடியாது எனவும், தனது உடலை தனுஷை அடக்கம் செய்த இடத்திற்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் கடிதத்தில் எழுதியபடியே உறவினர்கள் மஸ்கல் கிராமத்தில் தனுஷை அடக்கம் செய்த இடத்தின் அருகே சுஷ்மாவை அடக்கம் செய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
