Connect with us

    ஒரே பிரசவத்தில் 3 அழகான குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்; குவியும் வாழ்த்துக்கள்…!!

    Viral News

    ஒரே பிரசவத்தில் 3 அழகான குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்; குவியும் வாழ்த்துக்கள்…!!

    ஒரே பிரசவத்தில் 3 அழகான குழந்தைகளை இளம்பெண் பெற்றெடுத்துள்ளார்.

    மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், செம்பியன்வேலன்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் செழியன் (32). இவரது மனைவி ஆா்த்தி (32).

    இவா்களுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில், க.ர்.ப்.பமடைந்த ஆா்த்திக்கு சீா்காழி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை செய்ததில் அவரது வயிற்றில் 3 க.ரு.க்கள் வளா்வது தெரியவந்தது.

    கடந்த சில தினங்களுக்கு முன் ஆா்த்திக்கு பி.ரசவ வலி எடுத்ததை தொடா்ந்து, அவரை உறவினா்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

    அங்கு ஆர்த்திக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி 3 அழகான பெண் குழந்தைகள் பிறந்தன.

    ஒவ்வொரு குழந்தையும் சுமார் ஒன்றரை கிலோ எடை மட்டுமே இருந்த காரணத்தால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கண்காணிப்பு பிரிவில் இன்குபேட்டரில் வைத்து குழந்தைகளை பாதுகாத்து வந்தனர்.

    இதனை தொடர்ந்து 10 நாட்கள் ஆன நிலையில் இன்று ஆர்த்தி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    அவரை அவரது உறவினர்கள் மகிழ்ச்சியுடன் காரில் சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.

    இதை அறிந்து ஏராளமானோர் விரைந்து வந்து தாய் மற்றும் குழந்தைகளை பார்த்து மகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறி வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!