Connect with us

    வீட்டின் கழிவறையில் மயங்கி கிடந்த மாணவி; திறந்து பார்த்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

    Tamil News

    வீட்டின் கழிவறையில் மயங்கி கிடந்த மாணவி; திறந்து பார்த்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

    மதுரையில் பள்ளி மாணவியொருவர் வீட்டின் கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Girl birth

    மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் ஆன்லைன் வகுப்பு பயில்வதற்காக அவரது பெற்றோர் ஸ்மார்ட் போன் ஒன்றினை வாங்கி கொடுத்துள்ளனர்.

    இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு வாலிபர் இந்த மாணவியுடன் நட்பாக பழகியுள்ளார்.

    நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆசை வார்த்தை காட்டி சிறுமியை தனியாக அழைத்துச் சென்று தவறாக நடந்து கொண்டுள்ளார் அந்த வாலிபர்

    இதனால் கர்ப்பமான அந்த சிறுமி, பெற்றோருக்கு தெரியாமல் இந்த விசயத்தை மறைத்து வந்துள்ளார்.

    இதற்கிடையே கடந்த 22-ம் தேதி வீட்டின் கழிப்பறையில் குழந்தை சத்தம் கேட்டதை தொடர்ந்து, பாட்டியும் அம்மாவும் சென்று பார்த்த போது சிறுமி மயக்கத்தில் குழந்தையுடன் இருந்துள்ளார்.

    பின்னர் சிறுமியையும் குழந்தையும் மதுரை அரசு மருத்துவுமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து பெற்றோர் போலீஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

    போவீஸார் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், இன்ஸ்டாகிராமில் பழகிய குறிப்பிட்ட வாலிபர்தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

    இதுபற்றிய தகவலின்படி குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் புகாரின் பேரில் சமயநல்லூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து வாலிபரை கைது செய்துள்ளனர்.

    இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!