Connect with us

திருமணம் முடிந்த 7-வது நாளில் முதல் கணவருக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த ஆசிரியை…!

Marriage

Tamil News

திருமணம் முடிந்த 7-வது நாளில் முதல் கணவருக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த ஆசிரியை…!

இலங்கையில் ஆசிரியை ஒருவர் தனது முதலாவது திருமணம் முடிவடைந்து, ஏழு நாட்களுக்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Marriage

கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியையும், அவரது புதிய மணமகனையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக கம்பளை போலீஸார் தெரிவித்தனர்.

முதல் கணவரிடமிருந்து வந்த புகாரையடுத்து, கம்பளை போலீஸார் இரண்டாவது திருமணத்தை பதிவு செய்து கொண்டிருந்த பதிவாளரிடம், தகவலை தெரிவித்து , திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

29 வயதான இந்த ஆசிரியை 8 வருடங்களாக காதலித்து வந்த நபரை கடந்த ஜூன் 23 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அதன்பின்னர் பெற்றோரின் விருப்பத்தின்படி , மாவனெல்லயைச் சேர்ந்த மணமகனுடன் இரண்டு வருடங்கள் பழகிய பின்னர் ஜூன் 30 ஆம் தேதி கம்பளையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் போலீஸார் இரண்டாவது திருமணத்தை நிறுத்தி, மணமக்களையும் உறவினர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று, விசாரணை செய்தனர்.

அப்போது மணப்பெண் முதல் கணவனை தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அஞ்சி மணப்பெண் அப்படி கூறிய போதும் முதலாவது கணவர் திருமண படங்களையும் திருமணப் பதிவு சான்றிதழையும் காட்டி தான் கூறியதை உறுதி செய்துள்ளார்.

இதையடுத்து இரண்டாவது கணவர் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப் போவதாக தெரிவித்து அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Continue Reading
To Top
error: Content is protected !!