Tamil News
வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து எல்லாம் முடிந்த பின் கழட்டி விட்ட காதலன் வீட்டின் முன் காதலன் வீட்டாரை மிரள வைத்த பெண்..!
வீட்டுக்கு தெரியாமல் விநாயகர் கோவிலில் தாலிகட்டி திருமணம் செய்துகொண்ட காதல் மனைவியை தவிக்க விட்டு ஓடிப்போன காதல் கணவனை சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, செங்காடு கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பன். இவரின் மகள் ரஞ்சினி (வயது 27), எஞ்சினியரிங் பட்டதாரி ஆவார்.
இவர் பெங்களூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிறுவனத்தை அண்ணா நகரை சேர்ந்த வெங்கிடு என்பவரின் மகன் மோகன்ராஜ் நடத்தி வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மலரவே, இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இதனையடுத்து, சில மாதங்களுக்கு முன்னதாக பெங்களூரில் இருக்கும் விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள்.
பின்னர், இருவரும் பெங்களூரில் வீடு வாடகைக்கு எடுத்து ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் பெங்களூரில் இருந்து சொந்த ஊரான பவானிக்கு வந்த மோகன்ராஜ், ரஞ்சினையை மீண்டும் தொடர்புகொள்ளவே இல்லை.
ரஞ்சினி பலமுறை அவரை தொடர்புகொள்ள நினைத்த போதும் மோகன்ராஜ் ரஞ்சினியின் அழைப்பை ஏற்கவில்லை என தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சினி பெங்களூரில் இருந்து புறப்பட்டு பவனியில் இருக்கும் மோகன்ராஜின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, தான் ஏமாற்றப்பட்டது உறுதியாகவே, கண்ணீர் விட்டு கதறிய ரஞ்சினி காதல் கணவரை சேர்த்து வைக்கக்கூறி மோகன்ராஜின் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
காவல் துறையினர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பெண் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
