Connect with us

    காதலிக்க மறுத்த மாணவி; கோபத்தில் ஓடும் ரயில் முன்பு தள்ளிய மாணவன்; அதிர வைக்கும் சம்பவம்..!

    Sathya

    Tamil News

    காதலிக்க மறுத்த மாணவி; கோபத்தில் ஓடும் ரயில் முன்பு தள்ளிய மாணவன்; அதிர வைக்கும் சம்பவம்..!

    தன்னை காதலிக்க மறுத்த மாணவியை ஓடும் ரயில் முன்பாக தள்ளி விட்டு மாணவர் ஒருவர் கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும்அதிர்ச்சியைம், சோகத்தையும் ஏற்படுத்தியு ள்ளது.

    Sathya

    சென்னை அருகே உள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (47). இவரது மனைவி வரலட்சுமி (43).

    மாணிக்கம் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்,

    இவர்களது மகள் சத்யா(20). இவர் தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு படித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23). இவர் சத்யாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

    ரயிலில் கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம் சத்யாவிடம் சதீஷ் தனது காதலை அடிக்கடி கூறியுள்ளார்.

    ஆனால் ஒவ்வொரு முறையும் சத்யா, சதீஷின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலை திநகரில் உள்ள கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு சத்யா வந்துள்ளார்.

    அப்போது அங்கு சதீஷ் காத்திருந்தார். உடனே சத்யாவிடம் போய் தன் காதலை ஏற்குமாறு தெரிவித்தார்.

    ஆனால் அவரோ தன்னால் காதலை ஏற்க முடியாது என கூறியுள்ளதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் சதீஷின் தலைக்கு ஏறியது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதாக கூறப்படுகிறது. அப்போது தாம்பரம் நோக்கி செல்லும் ரயில் வந்து கொண்டிருந்தது.

    உடனே சதீஷ் , சத்யாவை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டார். இதில் தலை தனியாக உடல் தனியாக துண்டாக்கப்பட்டு அதே இடத்தில் சத்யா துடிதுடித்து இறந்தார்.

    உடனடியாக அவ்விடத்தை விட்டு சதீஷ் தப்பியோடிவிட்டார்.

    சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீஸார் பிரேதத்தை பறிமுதல் செய்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இந்த நிலையில் தப்பியோடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.

    துரைப்பாக்கத்தில் சதீஷ் பதுங்கியிருப்பதை அறிந்த தனிப்படை போலீஸார் அவரை நள்ளிரவு கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பாக தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!