Connect with us

    தன்னிடம் படிக்கும் மாணவியை மருமகளாக பாவித்து தனது மகனிடம் செல்போனில் பேச சொல்லி டார்ச்சர் கொடுத்த ஆசிரியை..!

    Girl student

    Tamil News

    தன்னிடம் படிக்கும் மாணவியை மருமகளாக பாவித்து தனது மகனிடம் செல்போனில் பேச சொல்லி டார்ச்சர் கொடுத்த ஆசிரியை..!

    தன்னிடம் படிக்கும் மாணவியை மருமகளாக அழைத்து, மகனிடம் பேசச் சொல்லி ஆசிரியை செய்த டார்ச்சரர் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Girl student

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில், கணித பாட முதுநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சாந்தி பிரியா.

    இவரது வகுப்பில் படிக்கும் பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை மருமகளே என முறை வைத்து அழைத்து மருமகளாக பாவித்துள்ளார் அந்த ஆசிரியர்.

    மேலும் அந்த மணவியிடம் அவரிடம் புகைப்படம் கேட்டும் தனது மகனிடம் அலைபேசியில் பேசுமாறும் வற்புறுத்தி உள்ளார்.

    அத்துடன் மாணவிகளை, வகுப்பறையில் அவமானப்படுத்துவதும். பாடத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு அவமதிப்பு செய்துள்ளார்.

    இரவு நேரங்களில் அலைபேசியில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்வதும், அலைபேசியை எடுக்க மறுத்தவர்களை மதிப்பெண்களில் கை வைப்பேன் என மிரட்டுகிறார்.

    மேலும் மாணவர்களை மிகவும் தரக்குறைவாக நடத்துவது மற்றும் தனது கணவரை இரவில் தூங்கும்போது நினைத்துக் கொள்ள வேண்டும் எனக்கூறி, தரக்குறைவான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக, பெற்றோர்கள் சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவருட்செல்வி அவர்களிடம் புகார் செய்யப்பட்டது.

    பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பள்ளியில் பணி செய்யாமல் காலம் தாழ்த்துவதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

    மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பள்ளிக்கு நேரடி ஆய்வு மேற்கொண்டு, காவல்துறை உதவியுடன் விசாரணை நடத்தி, மாணவர்களிடம் கடிதம் மூலமாக ஒப்புதல் பெற்று, ஆசிரியை சாந்தி பிரியா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டார்.

    மாணவிகளிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட ஆசிரியையால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!