Tamil News
கள்ளக்காதலனுடன் தாய் உல்லாசமாக இருந்ததை மறைந்திருந்து வீடியோ எடுத்த மகள்; அதன்பின் நடந்த விபரீதம்..!
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு, சாலை ரோடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சரவண செல்வன் (வயது 41)
இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சரவண செல்வன் அப்பகுதியில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில், சரவண செல்வனுக்கும் அவரது அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும் தனலட்சுமி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
இந்நிலையில் சரவணன் செல்வன் அந்த பெண்ணுக்கு பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் திடீரென்று தனலட்சுமியுடன் தொடர்பை சரவண செல்வன் நிறுத்திக் கொண்டார்.
இந்நிலையில் தனலட்சுமி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சரவண செல்வன் மீது புகார் கொடுத்ததாக தெரிகிறது.
இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் சரவண செல்வனை அழைத்து புகார் மனு குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சரவண செல்வன் இரவு வீட்டின் அறையில் தூங்குவதாக மனைவியிடம் கூறிவிட்டுஅறைக்கு சென்றவர் தூ.க்.கு மாட்டி த.ற்.கொ..லை செய்து கொண்டார்.
விடியற்காலை நீண்ட நேரம் ஆகியும் கணவர் காலையில் அறையில் இருந்து வெளியே வராத காரணத்தால் சந்தேகம் அடைந்த மனைவி அறைக்கு சென்று பார்த்தபோது சரவண செல்வன் உயிரிழந்து கிடப்பதை கண்டு மனைவி லாவண்யா அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, சரவண செல்வன் எழுதியிருந்த தற்கொலை கடிதம் கிடைத்தது.
அதில், தன்னுடைய தற்கொலைக்கு காரணம்..
தனலட்சுமி மற்றும் அவர் குடும்பத்தினர் மற்றும் காவல் துறையில் பணியாற்றும் திருமூர்த்தி, ரைட்டர் முத்துசாமி , ஸ்ரீ ட்ரெய்லர் கடையில் வேலை செய்யும் செல்வி மகன் லிஷாந்த், மகள் ஜோசிகா தனலட்சுமி ஆகியோர் பொறுப்பு என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கொண்டு நடத்திய விசாரணையில், கள்ளக்காதலி தனலட்சுமிக்கு கல்யாணமாகி குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், செல்வத்துடன் கள்ளக்காதல் ஏற்பட்டு இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர்.
செல்வத்திடம் நெருங்கி பழகிவந்த தனலட்சுமி செல்வத்திடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, செல்வத்துடன் தனலட்சுமி வீட்டில் நெருக்கமாக இருப்பதை தனது மகள் மூலமாக செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அதை காட்டி செல்வத்தை மிரட்டி வந்துள்ளார்.
இதனால் பதறிப்போன செல்வம், விஷயம் தனது மனைவிக்கு தெரிந்து விடுமோ என்ற மன உளைச்சலிலும், போலீஸ் மிரட்டலாலும் த.ற்கொ.லை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.
தற்போது போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
