Connect with us

    குப்பையுடன் சென்ற 5 சவரன் தங்க நகையை (gold chain), குப்பைக்கிடங்கில் தேடி கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள்; குவியும் பாராட்டுக்கள்..!!

    Gold chain handed over by cleaning workers

    Uncategorized

    குப்பையுடன் சென்ற 5 சவரன் தங்க நகையை (gold chain), குப்பைக்கிடங்கில் தேடி கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள்; குவியும் பாராட்டுக்கள்..!!

    குப்பையுடன் தவறுதலாக சென்ற 5 சவரன் தங்க நகையை (gold chain)குப்பைக்கிடங்கில் தேடி கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    Gold chain handed over by cleaning workers

    சிவகங்கை மாளவியார் தெருவில் வசித்து வருபவர் நாகேஸ்வரி (வயது 50). இவருடைய 5½ பவுன் நகை நேற்று காணாமல் போனது.

    இதைத் தொடர்ந்து வீடு முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் நகையை கண்டுபிடிக்க முடியவில்லை.

    பின்னர் தூய்மை பணியாளர்களிடம் குப்பையை கொடுத்தது நினைவுக்கு வந்தது. நகையை குப்பையுடன் சேர்த்து கொடுத்திருப்போமோ என்ற சந்தேகம் தோன்றியது.

    தினசரி குப்பைகளை சேகரிக்கும் தூய்மை பணியாளர்கள் ஆறுமுகம், ஜெயந்தி ஆகியோர் வழக்கம் போல் அனைத்து வீடுகளிலும் குப்பைகளை சேகரித்து சென்று அதற்குரிய இடத்தில் கொட்டிவிட்டு சென்றனர்.

    உடனடியாக நாகேஸ்வரி அந்த தூய்மை பணியாளர்களை சந்தித்து தன்னுடைய நகை தொலைந்து போன விபரத்தை கூறி காணாமல் போன நகை குப்பையில் சேர்ந்து கிடந்தால் எடுத்து தரும்படி கூறினார்.

    இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் ஆறுமுகம், ஜெயந்தி ஆகியோர் தாங்கள் சேகரித்த குப்பையை கொட்டிய இடத்தில் போய் தேடினர்.

    மூன்று மணி நேரமாக தேடி தங்க சங்கிலியை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நகையை நாகேஸ்வரியிடம் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

    சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பத்திரமாக மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு நாகேஸ்வரி குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!