Cinema
பிரபல நடிகை சாப்பிட்ட தோசையில் கிடந்த தங்க மூக்குத்தி; அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!
கேரள மாநிலத்தில் பிரபல நடிகை ஒருவர் சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி இருந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலத்தில் காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் சூரிய தாரா. இவர் ஒரு பிரபலமான டிவி நடிகை.
ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
நேற்று இரவு படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் ஒரு கடையில் நின்று தோசை மாவு வாங்கி வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்ததும் குழந்தைகளுக்கு தோசை ஊற்றி கொடுத்து விட்டு அதன் பின்னர் தானும் தோசை ஊற்றி சாப்பிட்டிருக்கிறார்.
அப்போது சூரிய தாரா சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி கிடந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் (முகநூல் பக்கத்தில்) சூரிய தாரா பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் “இந்த தோசையை குழந்தைகள் சாப்பிட்டிருந்தால் உடல் நலனுக்கு பிரச்சினை ஏற்பட்டு இருக்கும்.
தோசை மாவை பேக் செய்யும் போது எதிர்பாராத விதமாக மூக்குத்தி மாவில் விழுந்திருக்கலாம்” என
கூறியுள்ளார்.
இதனை போட்டோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
