Connect with us

    சர்வதேச சிலம்பம் போட்டியில், தங்க பதக்கம் வென்ற ஈரோடு மாணவி; குவியும் பாராட்டுக்கள்..!!

    Gomathi won gold medal

    Sports News

    சர்வதேச சிலம்பம் போட்டியில், தங்க பதக்கம் வென்ற ஈரோடு மாணவி; குவியும் பாராட்டுக்கள்..!!

    சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஈரோடு மாணவி கோமதிக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    Gomathi won gold medal

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் கோமதி.

    இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கோமதி சிலம்பம் சுற்றுவதில் கைதேர்ந்தவர்.

    மாநில, தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று, தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

    இந்நிலையில், நேபாள நாட்டில் கடந்த 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடந்த சர்வதேச அளவிலான போட்டியில் கோமதி கலந்து கொண்டு, தங்க பதக்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

    இதையடுத்து, நேபாள நாட்டில் இருந்து நேற்று ஈரோடு திரும்பிய மாணவி கோமதியை, ஈரோடு ரயில் நிலையத்தில் மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ., சரஸ்வதி நேரில் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்து வரவேற்று, பாராட்டுக்களை தெரிவித்தார்.

    மேலும், பயிற்சியாளரும், அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!