Connect with us

    தனது மகனை சிகிச்சை அளிக்க சொல்லி விட்டு ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்று கும்மாளம் போட்ட அரசு மருத்துவர்; விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சிகரமான உண்மைகள்..!

    Doctor dinakaran

    Tamil News

    தனது மகனை சிகிச்சை அளிக்க சொல்லி விட்டு ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்று கும்மாளம் போட்ட அரசு மருத்துவர்; விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சிகரமான உண்மைகள்..!

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் மகனை மருத்துவம் பார்க்க வைத்த விவகாரத்தில், மருத்துவமனை தலைமை மருத்துவர் உள்ளிட்ட இருவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

    Doctor dinakaran

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

    இதனால் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை எப்போதும் பிஸியாகவே காணப்படும்.

    இங்கு தலைமை மருத்துவராக குருப்ப பாளையத்தை சேர்ந்த தினகரன் (57) பணியாற்றி வருகிறார்.

    மேலும், முதுநிலை உதவி மருத்துவர்களாக அசோக், வினோத்குமார், சரவணகுமார், சண்முகவடிவு ஆகிய மருத்துவர்களும், 10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், மருந்தாளுநர்கள் பணிசெய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது.

    மேலும், தனது மகனும, பயிற்சி மருத்துவராக உள்ள தனது மகன் அஸ்வின் (24) என்பவரை கவுந்தபாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.

    அதன்படி, அஸ்வின் அன்றைய தினம் முழுவதும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

    இந்த நிலையில், சிகிச்சைக்காக வந்த கவுந்தப்பாடியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு புறநோயாளிகள் பிரிவில் டோக்கன் வழங்காமலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    அவர் தலைமை மருத்துவர் குறித்து விசாரித்தபோது விடுமுறையில் சென்றுள்ளதாகவும், தான் பவானி அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ளதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    சந்தேகமடைந்த முருகேசன் விசாரித்தபோது, அஸ்வின் அரசு மருத்துவராக பணி செய்வில்லை என்பதும், அவர் தலைமை மருத்துவரின் மகன் என்பதும் தெரிய வந்தது.

    இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மேலும் மருத்துவர் தினகரன் சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதிக்கு உத்தரவிட்டார்.

    இந்த விவகாரம் குறித்து அவர், கவுந்தபாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று செவிலியர்கள், பணியாளர்கள், தலைமை மருத்துவர், நோயாளிகளிடம் விசாரணை நடத்தினார்.

    சுமார் 4 மணி நேரம் நடந்த விசாரணையில் தலைமை மருத்துவர், அவரது மகனை சிகிச்சை பார்க்க வைத்தது உறுதி செய்யப்பட்டது.

    மேலும், சில மருத்துவர்கள் பணியின்போது பணியில் இல்லாததும் தெரிய வந்தது.

    இது குறித்த விசாரணை அறிக்கை, மாநில மருத்துவ பணிகள் இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் மகனை சிகிச்சை பார்க்க வைத்த கவுந்தம்பாடி தலைமை மருத்துவர் தினகரன் மற்றும் பணி நேரத்தில் பணியில் இல்லாத பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

    மேலும், அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!