Cinema
“செருப்பால் அடித்திருப்பேன்” – பிக்பாஸில் ஆவேசமாக பேசிய ஜிபி முத்து; கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்..!
சின்னத்திரையில் எண்ணற்ற ரசிகர்களை கொண்ட ஒரே ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
இந்த வார இறுதியில் எலிமினேஷன் இருப்பதால் யார் முதலில் வெளியே செல்வார் என்று ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பிக் பாஸ் சீசன் 6-ல் நுழைந்த ஜிபி முத்துவுக்கு முதல் நாளில் இருந்தே ரசிகர்களின் பெரும் ஆதரவு இருந்து வந்தது.
ஜிபி முத்து வழக்கம் போல தன்னுடைய காமெடி மூலம் கலக்கி வருகிறார்.
வீட்டில் சண்டைகள் சச்சரவுகள் ஒரு பக்கம் இருந்தாலும் எப்போதும் போல் பிக்பாஸ் அவரது டாஸ்கை கொடுத்து கொண்டே தான் இருக்கிறார்.
இந்நிலையில் நேற்று ஜிபி முத்து சக போட்டியாளரான பெண்ணை செருப்பால் அடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
இதனை கண்டிக்கும் விதமாக விக்ரமன் ஜிபி முத்துவிடம், அண்ணே உங்க பொண்ணா இருந்தா கூட செருப்பால அடிப்பேன் சொல்றது தப்புண்ணே.., காலம் மாறிப்போச்சு என்று கூறினார்.
அதற்கு ஜிபி முத்து, “என் பிள்ளையை நான் அடிப்பேன்..நீங்க என்ன பேசுறீங்க.., ஊர்ல வந்து பாருங்க” என்று பேசியுள்ளார். ஜிபி முத்து பேசியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனலட்சுமி குறித்து விக்ரமனிடம் ஜிபி முத்து இவ்வாறு கூறியதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
