Connect with us

    உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை செஸ் ஆட்டத்தில் வீழ்த்திய தமிழக இளம் செஸ் வீரர் குகேஷ்; குவியும் பாராட்டுக்கள்..!

    Gukesh with Magnus Carlson

    Sports News

    உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை செஸ் ஆட்டத்தில் வீழ்த்திய தமிழக இளம் செஸ் வீரர் குகேஷ்; குவியும் பாராட்டுக்கள்..!

    உலக சாம்பியனான மேக்னஸ்
    கார்ல்சனை ஏம்செஸ் ரேபிட் ஆன்லைன் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக இளம் வீரர் குகேஷ் வென்று சாதனை புரிந்துள்ளார்.

    Gukesh with Magnus Carlson

    ஏம்செஸ் ரேபிட் ஆன்லைன் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் வரை 9 சுற்றுகளாக நடத்தப்பட்டுவருகிறது.

    இதுவரை 7 தொடர்கள் முடிந்துள்ள நிலையில், 8வது தொடர் கடந்த 14ம் தேதி முதல் வரும் 21 வரை நடக்கிறது.

    இந்த தொடரில் 5 முறை உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 16 வீரர்கள் கலந்து கொண்டு ஆடிவருகின்றனர்.

    இந்தியா சார்பில் தமிழக வீரர் குகேஷ், அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணன், விதித், அதியா மிட்டல் ஆகிய ஐந்து வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

    இந்த தொடரில் 5 முறை உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 16 வீரர்கள் கலந்துகொண்டு ஆடிவருகின்றனர்.

    அந்த வகையில் இதன் ஒன்பதாவது சுற்று ஆட்டத்தில் 16 வயதான தமிழக வீரர் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் – உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 26வது நகர்த்தலில் கார்ல்சனை வீழ்த்தி சாதனை நிகழ்த்தியுள்ளார் குகேஷ்.

    ஏற்கனவே இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி நேற்று ஏழாவது சுற்று ஆட்டத்தில் கார்ல்சனை வீழ்த்தி இருந்த நிலையில் தற்போது தமிழக வீரர் குகேஷ் கார்ல்சனை வீழ்த்தி இருக்கிறார்.

    இதன் மூலம் கார்ல்சன் உலக சாம்பியன் ஆன பிறகு அவரை வீழ்த்திய இளம் வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.

    இந்த வெற்றி மூலம் உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய ஐந்தாவது இந்திய வீரர் என்கிற பெருமையை, விஸ்வநாதன் ஆனந்த், பி ஹரிக்ரிஷ்ணா, ப்ரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி ஆகியோருக்கு பிறகு பெற்றுள்ளார்.

    அதுமட்டுமின்றி குகேஷ் அவரது 16 வயதில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியுள்ளார்.

    இதன் மூலம் குறைந்த வயதில் கார்ல்சனை விழ்த்திய வீரர் என்ற பெருமையும் அவர் வசம் ஆகியுள்ளது.

    ஏற்கனவே இதே சாம்பியன்ஷிப்பில் முதல் மற்றும் நான்காவது தொடரில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய குகேஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!