Connect with us

    பார்க்காமலேயே பேஸ்புக்கில் காதல் செய்த காதலி திடீரென இறந்ததால்; துக்கம் தாளாமல் காதலன் எடுத்த விபரீத முடிவு..!

    Facebook love

    Tamil News

    பார்க்காமலேயே பேஸ்புக்கில் காதல் செய்த காதலி திடீரென இறந்ததால்; துக்கம் தாளாமல் காதலன் எடுத்த விபரீத முடிவு..!

    சேலம் மாவட்டத்தின் பெத்தநாயக்கன் பாளையத்தில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்தவர் மணிகண்டன். வயது.26.

    இவரது சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மேலத்தேனூர் கிராமமாகும்.

    இந்நிலையில், மணிகண்டனிற்கு பேஸ்புக் மூலமாக பூமிகா என்ற பெண் பழக்கமாகி இருக்கிறார்.

    Facebook love

    காலப்போக்கில் இருவரும் காதல் வயப்பட்டிருக்கிறார்கள்.

    இப்படி இருக்கையில், திடீரென மணிகண்டனிடம் பூமிகா பேசாமல் இருந்திருக்கிறார்.

    இதனால் தவித்துப்போன மணிகண்டன் பூமிகாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அவரது பாட்டி எடுத்து பேசியிருக்கிறார்.

    அப்போது, இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்த பூமிகா அண்மையில் இறந்துவிட்டதாக பாட்டி கூறியதும் செய்வதறியாது திகைத்த மணிகண்டன் நிலைகுலைந்து போயுள்ளார்.

    இதனையடுத்து நேரில் கூட பார்த்திராத காதலி இதய நோயால் இறந்ததை அடுத்து சோகம் தாளாமல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்திருக்கிறார்.

    இதனால் மயங்கிய மணிகண்டனை குடும்பத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

    அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

    அங்கு சிகிச்சையில் இருந்து வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை அவரது சுற்றத்தாரை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!