Viral News
நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு; வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி செய்த பகீர் செயல்…!!
கணவரின் நண்பருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் இரண்டு குழந்தைகளுடன் பெண் கள்ளக்காதலுடன் மாயமாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் விக்ராபாத் மாவட்டம் பஷீராபாத்தை சேர்ந்தவர்கள் பித்திலி விசுவநாத், பரமேஷ்.
இவர்கள் இருவரும் சிறுவயது முதலே நண்பர்கள்.
இருவரும் அடிக்கடி தங்களது வீடுகளில் சந்தித்துக் கொள்வதுண்டு.
இந்நிலையில் பரமேஸ் மனைவியுடன் விஸ்வநாத் நெருங்கி பழகி வந்தார். இது ஒரு கட்டத்தில் திருமணத்திற்கு புறம்பான உறவுக்கு வழிவகுத்தது.
நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பரமேஷ் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
தனது நண்பனுடன் பழகுவதை கைவிடுமாறு வலியுறுத்தினார். ஆனால் மனைவி பவானி அதைக் கேட்கவில்லை.
இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது.
அன்று மறுநாளிலிருந்து விசுவநாத்தும் பவானியும் ஊரைவிட்டு வெளியேறினர்.
அதாவது கடந்த மாதம் 30ஆம் தேதி இரண்டு குழந்தைகளுடன் பவானி காதலனுடன் மாயமானார்.
அன்றைய தினம் விசுவநாத் தன் மனைவியை அழைத்து சென்று இருக்க கூடும் என பரமேஷ் விஸ்வநாதன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதாவது விஷ்வநாத் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கடத்தி சென்றுவிட்டதாகவும் 4 சவரன் தங்கம் மொத்தம் 42 ஆயிரம் பணத்துடன் சென்றுவிட்டதாகவும் புகாரில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தனது மனைவியுடன் மாயமான விஸ்வநாதனுக்கு கடந்த மூன்று மாதத்துக்கு முன்பாக அனுராதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் வேறு ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு தனது கணவன் ஓடிவிட்டதாக அனுராதா விஸ்வநாத் மீது காவல் திலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தனது மாமனாரிடம் தனது கணவன் தனக்கு மோசம் செய்துவிட்டதாக கூறி கதறினார்.
இந்நிலையில் விஷ்வநாத்தின் தந்தை அஞ்சிலப்பா, 4 நாட்களுக்குள் மகன் திரும்பி வரவில்லை என்றால் சொத்து முழுவதும் மகளின் பெயரில் எழுதி வைப்பேன் என கூறியுள்ளார்.
தனது கணவர் எங்கு மாயமானார் என்பது குறித்து இதுவரை தங்களுக்குத் தெரியாது என்றும், அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் விஸ்வநாத் பவானி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
