Cinema
“அண்ணா! எக்ஸாம் பீஸ் கட்ட பணம் இல்லணா; ஹெல்ப் பண்ணுவீங்களா” – ட்விட்டரில் உதவி கேட்ட கல்லூரி மாணவிக்கு உடனே பணம் அனுப்பி உதவிய ஜி.வி.பிரகாஷ்…!
கல்லூரி தேர்வு கட்டணம் செலுத்த உதவ வேண்டும் என கல்லூரி மாணவி ஒருவர் ட்விட்டரில் கோரிக்கை வைத்த சில நிமிடங்களிலேயே அந்த மாணவிக்கு அவரது ஜிபே-க்கு பணம் அனுப்பி உதவி உள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.
ஜிவி பிரகாஷ் தமிழ்த் திரைப்பட நடிகரும் மற்றும் இசையமைப்பாளர் ஆவார்.
எஸ். சங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான வெயில் என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும்.
தமிழ்த் திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்குகிறார்.
இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வரும் ஜிவி பிரகாஷ், சோஷியல் மீடியாக்களிலும் ரொம்பவே ஆக்டிவாக இருக்கிறார்.
அரசியல், சினிமா உட்பட எந்த பிரச்சினையாக இருந்தாலும் டிவிட்டரில் தைரியமாக கருத்து சொல்வதில் ஜிவி பிரகாஷ் தயங்கியதே இல்லை.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஒரு நடிகர் என்பதை தாண்டி பல்வேறு சமூக பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார்.
இயற்கை பேரிடர் காலங்களில் நேரடியாக மக்களுக்கு காலத்தில் இறங்கி பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.
அத்தோடு ஜல்லிக்கட்டு போன்ற போராட்டங்களிலும் கலந்து கொண்டு, தமிழர்களின் கலாச்சார விளையாட்டுகளுக்கு குரல் கொடுத்தவர்களின் இவரும் ஒருவர் என்று தான் கூற வேண்டும்.
இசையமைப்பாளராகவும் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் அறியப்பட்ட ஜி.வி.பிரகாஷ் தன்னிடம் உதவியென வருபவர்களுக்கும், உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு சத்தமில்லாமல் உதவி செய்து வருகின்றார்.
இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த BCA படிக்கும் கல்லூரி மாணவி ஹேம பிரியா , தேர்வு நெருங்கி விட்டதாகவும் அதற்கான கட்டணம் தன்னிடம் இல்லையென ட்விட்டர் பக்கத்தில் ஜி.வி.பிரகாஷிடம் ட்விட்டரில் உதவி கேட்டார்.
உடனடியாக GPay மூலம் அவருக்கு தேவையான பணத்தை கொடுத்துள்ளாராம் ஜி.வி.பிரகாஷ்.
எனினும் இதை தொடர்ந்து அந்த மாணவியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷுக்கு நன்றி தெரிவித்து, தேர்வுக்கு தனக்கு வாழ்த்தும் படி கூறியுள்ளார்.
இந்த தகவல் தற்போது வெளியே வர, ரசிகர்கள் பலரும் ஜி.வி.பிரகாஷுக்கு தங்களின் பாராட்டுக்களை கூறி வருகிறார்கள்.
