Connect with us

    இரு கைகளும் இல்லையென பெற்றோரால் கைவிடப்பட்டு ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்ந்த மாணவி +2 தேர்வில் தேர்ச்சி; குவியும் பாராட்டுக்கள்..!

    Handicapped student lakshmi

    Tamil News

    இரு கைகளும் இல்லையென பெற்றோரால் கைவிடப்பட்டு ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்ந்த மாணவி +2 தேர்வில் தேர்ச்சி; குவியும் பாராட்டுக்கள்..!

    இரு கைகளும் இல்லையென பெற்றோரே கைவிட்ட நிலையில் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காமல் படித்து பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    Handicapped student lakshmi

    சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு கூட்ட அரங்கில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை வெளியிட்டார்.

    இதில் இரு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியை உதவியுடன் தேர்வெழுதிய ஆதரவற்றோர் காப்பகத்தை சேர்ந்த மாணவி லட்சுமி 277 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

    மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 கைகளும் இல்லாத லெட்சுமி என்ற மாணவி, ஆசிரியை உதவியுடன் கடந்த மே மாதம் நடந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்.

    வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு மாணவி பதிலளிக்க ஆசிரியர் அதை எழுதினார்.

    பிறந்தபோதே 2 கைகளும் இல்லாத பெண் குழந்தை என்பதால், பெற்றோர்கள் இவரை பராமரிக்க இயலாமல் கைவிட்டதால், மயிலாடுதுறை ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இவர் 2 வயது குழந்தையாய் இருந்தபோதிலிருந்து அங்கு வளர்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில், மாணவி லட்சுமி 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

    அவர் 277 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து ஆதரவற்றோர் இல்லத்தின் நிர்வாகிகள், காப்பாளர்கள் மாணவி லட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!