Tamil News
இரவில் வீட்டில் தனியாக இருந்த பெண் போலீசின் வீட்டிற்குள் நைசாக நுழைந்து ஏட்டு செய்த பலான காரியம்; அதிர்ச்சியில் போலீசார்..!!
சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டின் ஜீப் டிவைராக பணியாற்றி வருபவர் போலீஸ் ஏட்டு செல்வன்(வயது 32).
இவரது மனைவி ஈரோடு ரயில்வே போலீஸில் பணியாற்றி வருகிறார். இவர்கள் ஈரோடு பழைய ரயில்வே போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.
செல்வனுக்கும் அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் பெண் போலீஸ் ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.
இவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அவருக்கு குழந்தைகள் இல்லை.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஏட்டு செல்வன் அந்த பெண் போலீசிடம் அவ்வப்போது பேச்சு கொடுத்துள்ளார்.
இருவரும் ஒரே துறையை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பெண்ணும் ஏட்டு செல்வனுடன் நட்புறவு கொண்டாடி உள்ளார்.
சம்பவத்தன்று பெண் போலீஸ் வீட்டிற்கு செல்வன் சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த பெண்ணை செல்வன் பா.லியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
அவரது பிடியில் இருந்து தப்பியவர் வீட்டிக்கு வெளியே ஓடி வந்து அக்கம்பக்கத்தினரின் உதவியை நாடினார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு சூரம்பட்டி காவல்நிலையத்தில் பெண் போலீஸ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணை செல்வன் தவறாக நடக்க முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து செல்வன் மீது வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர்.
