Viral News
காவல் நிலையத்தில் சீருடையில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஏட்டு; வெளியான அதிர்ச்சி காணொளி..!!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டு ஒருவர் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் அடுத்த பாங்கர்மாவ் பகுதியில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த காவல் நிலையித்தில், தீப் சிங் என்பவர் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
அந்த காவல் நிலையத்திற்கு உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வந்துள்ளார்.
அந்த பெண் எதற்காக வந்தார் என்று தெரியவில்லை. அந்த பெண்ணை ஏட்டு தீப் சிங் கட்டிபிடித்து கொஞ்சி உள்ளார்.
காவல் நிலையத்திலேயே கட்டில், தலைகாணி எல்லாம் இருக்கிறது.
அந்த கட்டிலில்தான் ஏட்டு தீப் சிங் உட்கார்ந்து கொண்டு, அனைத்து சேட்டைகளையும் செய்துள்ளார்.
அதுவும் போலீஸ் யூனிபார்மிலேயே இந்த அக்கிரமத்தை செய்துள்ளர்.
இந்த சம்பவம் 2 வருடத்துக்கு முன்பு நடந்ததாக கூறுகிறார்கள்.
ஆனால், இந்த வீடியோ இப்போதுதான் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, இந்த ஏட்டு தீப் சிங்கும் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “பாங்கர்மாவ் காவல் நிலையத்தில் ஏட்டு தீப் சிங், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முன் கோட்வாலி காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, பெண் ஒருவருடன் ஆபாசமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.
அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அதையடுத்து உன்னாவ் எஸ்பி உத்தரவின் பேரில் ஏட்டு தீப் சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எதற்காக அந்த பெண்ணிடம் அவர் ஆபாசமாக நடந்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.
