Tamil News
“நான் கிறிஸ்தவர், எனவே கொடியேற்ற மாட்டேன்; என்னை விட்ருங்க” – தேசியக் கொடியை அவமரியாதை செய்த தலைமை ஆசிரியை..!
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ளது பேடரஅள்ளி ஊராட்சி. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான
மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் அனைத்து வீடுகளிலும் இந்திய தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
அந்த வகையில், பேடர அள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியிலும் ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
அப்போது, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்செல்வி தேசியக் கொடியேற்ற மறுத்தாா்.
இதையடுத்து அப்பள்ளியில் பணியாற்றும் வேறு ஆசிரியா் தேசியக் கொடியேற்றி வைத்தாா்.
இது தொடா்பாக ஊா் பொதுமக்கள் அந்த தலைமை ஆசிரியையிடம் கேட்டபோது, தான் சாா்ந்துள்ள கிறிஸ்தவ மதப்பிரிவின் நம்பிக்கைபடி தேசியக் கொடியை என்னால் வணங்க முடியாது.
எனவே தேசியக் கொடியினை நான் எப்போதும் ஏற்றுவதில்லை என அவா் பதிலளித்துள்ளாா்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடியேற்றாததை கண்டித்து ஊர் பொது மக்கள் சார்பில் முதன்மை கல்வி அலுவலரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாா் மனு தொடா்பாக மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த விசாரணையில் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
தலைமையாசிரியை தமிழ்செல்வி அப்பள்ளியில் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆனது என்பதும் நான்கு ஆண்டுகளும் அப்பள்ளியில் பணிபுரியும் மற்ற ஆசிரியர்கள் தான் கொடிஏற்றுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
