Connect with us

    கடும் வலியால் துடிதுடித்த 8 மாத குழந்தை; ஸ்கேன் எடுத்து பார்த்த டாக்டர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

    scan and opration

    Viral News

    கடும் வலியால் துடிதுடித்த 8 மாத குழந்தை; ஸ்கேன் எடுத்து பார்த்த டாக்டர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

    கேரள மாநிலம் திருச்சூர் மண்ணுத்தி பகுதியை சேர்ந்தவர்கள் வினோத்- தீபா தம்பதிகள். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

    குழந்தை கடந்த 2 வாரங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்தது. சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர்.

    இந்நிலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

    ஆனால் குழந்தையின் உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது.

    ஆரம்ப கட்ட சிகிச்சைகள் பலனிக்காததால் குழந்தைக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

    scan and opration

    குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளித்தும் குழந்தையின் உடல் நிலை முன்னேற்றம் அடையவில்லை என்பதால் வேறு ஏதும் பிரச்சினை குழந்தையிடம் இருக்கிறதா? என்பதை கண்டறிய மருத்துவர்கள் முயற்சி எடுத்திருக்கிறார்கள்.

    அப்படி ஸ்கேன் எடுக்கும் போது , குழந்தையின் சுவாச குழாயில் ஊக்கு ஒன்று சிக்கியிருப்பதைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை அடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை மூலமாக ஊக்கை அகற்றும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.

    அதிர்ஷ்டவசமாக, குழந்தையின் சுவாசக் குழாயில் இருந்து ஊக்கு வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

    Hook removed from a baby stomach

    அறுவை சிகிச்சையின் பலனாக குழந்தையின் உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் குழந்தை பூரண குணமடைந்ததால் இன்று குழந்தையினை டிஸ்சார்ஜ் செய்ய அனுமதித்தனர்.

    கடந்த இரண்டு வாரங்களாக சுவாசக் குழாயில் ஊக்கு சிக்கியதால் பாதிப்படைந்த தங்களது குழந்தை தற்போது பூரண நலமடைந்து இருப்பது மகிழ்ச்சியளிப்பதாவும் இன்று சந்தோஷத்துடன் வீடு திரும்ப இருப்பதாகவும் குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!