Connect with us

“பீஸ்ட் (Beast) படத்தை தடை செய்ய வேண்டும்” – முஸ்லீம் அமைப்புகள் கோரிக்கை..!!

Beast

Cinema

“பீஸ்ட் (Beast) படத்தை தடை செய்ய வேண்டும்” – முஸ்லீம் அமைப்புகள் கோரிக்கை..!!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட் (Beast).

Beast

பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அண்மையில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களைக் கவர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்தது.

படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த கேலக்ஸி திரையரங்கம் பீஸ்ட் (Beast) படக் கதையை பகிர்ந்துள்ளது.

அதில் நகரின் பரபரப்பான பகுதியை சர்வதேச பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர்.

பயங்கரவாத அமைப்பின் தலைவரை விடுவிக்கக்கோரி இந்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.

இந்த நிலையில் பயங்கரவாதிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்பிரிவின் தலைவருக்கு, பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட பகுதியில் ரா உளவு அமைப்பின் முன்னாள அதிகாரி இருப்பது தெரிய வருகிறது.

இதனையடுத்து பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்க, அவரது உதவியை நாடுகின்றனர்.

அந்த முன்னாள் அதிகாரி பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்படத் தொடங்குகிறார்.

அதன் ஒரு பகுதியாக பயங்கரவாத அமைப்பின் தலைவரை அரசு விடுவிக்க சம்மதிக்கிறது.

இந்த நிலையில் முன்னால் உளவு அதிகாரி புத்திசாலி தனமாக செய்லபட்டு பயங்கரவாதிகளிடமிருந்து சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டு, பயங்கரவாதிகளை ஒழித்துகட்டுகிறார் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், குவைத்தில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

படத்தில் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போன்று சித்தரித்து இருப்பதாலும், நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாலும் அந்நாட்டில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், பீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டும் படியாக கதை இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பைக் கடைபிடித்துவருகின்றனர்.

இந்தச் சூழலில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ள விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளிவந்தால் பிரச்னை ஏற்படும்.

எனவே, பீஸ்ட் திரைப்படம் வெளியிட உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
To Top
error: Content is protected !!