Politics
ஒரே வீட்டில் கணவன், மனைவி இருவரும் கவுன்சிலர்கள்; திருவாரூர் தேர்தலில் சுவாரஸ்யம்..!!
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ளன.
இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.
தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் எண்ணப்பட்டு வருகின்றன.
பல வார்டுகளில் தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டு வருகிறது.
இதில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடந்தேறி வருகிறது.
திருவாரூரில் வார்டு உறுப்பினர் தேர்தலில் கணவன்,மனைவி, வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
திருவாரூர் நகராட்சி தேர்தலில் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க.வி சார்பில் தம்பதியினர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில் 1வது வார்டு பதவிக்கு எஸ்.கலியபெருமாள் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடைய மனைவி மலர்விழி கலியபெருமாள், நகராட்சி 2வது வார்டில் போட்டியிட்டார்.
இவர், கடந்த 24 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே ஒரு முறை நகர் மன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
திருவாரூர் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க.வி சார்பில் போட்டியிட தம்பதியினர் வேட்பு மனு தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் தற்போது இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதையடுத்து வெற்றி பெற்ற தம்பதியை கிராம மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
