Tamil News
வெளியூர் சென்ற கணவர்; கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி; திடீரென கதவை திறந்த கணவன்; அதன் பின்னர் என்ன நடந்தது தெரியுமா..!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொள்ளார் பகுதியை சேர்ந்தவர் ஓட்டுனர் ஜேம்ஸ் 35.
இவருக்கும் செஞ்சி பகுதியை சேர்ந்த அருணா 28 என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஜேம்ஸ் வேலை நிமித்தமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனம் இயக்குவதற்காக சென்றுள்ள நிலையில், அதே கொள்ளார் கிராமத்தை சேர்ந்த விக்ரமுடன் கடந்த 10 வருடங்களாக தகாத உறவு இருந்து வந்துள்ளது.
இது தெரிந்து கணவர் ஜேம்ஸ் மனைவியை பலமுறை எச்சரித்து வந்துள்ளார்.
இந் நிலையில், கடந்த 5 மாதத்துக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக செஞ்சி ராஜேந்திர நகரில் உள்ள அருணாவின் தாயார் வீட்டில் கடந்த 5 மாதங்களாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அருணா மற்றும் கள்ளக்காதலன் விக்ரம் ஆகியோர் அம்மா வீட்டில் இல்லாத நேரத்தில் தனிமையில் இருந்துள்ளார்.
அப்போது திடீரென வீட்டிற்குள் அருணாவின் கணவர் ஜேம்ஸ் உள்ளே நுழைந்துள்ளார்.
தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி மற்றும் கள்ளக்காதலன் விக்ரம் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார்
இதில் நிலைகுலைந்த இருவரும் காயமடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் மனைவி மற்றும் கள்ளக்காதலனை வெட்டிய ஜேம்ஸ் மீது அருணா செஞ்சி காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் செஞ்சி போலீசார் ஜேம்ஸ் ஐ கைது செய்தனர்.
பட்டப்பகலில் மனைவி மற்றும் கள்ளக்காதலனை வெட்டிய சம்பவத்தால் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
