Connect with us

    மனைவி அழகாக இருந்ததால், சந்தேகத்தில் கணவன் செய்த பகீர் செயல்; அதிர்ச்சியில் போலீசார்..!

    Husband beaten wife

    Tamil News

    மனைவி அழகாக இருந்ததால், சந்தேகத்தில் கணவன் செய்த பகீர் செயல்; அதிர்ச்சியில் போலீசார்..!

    மனைவியை கடந்த மூன்று மாத காலமாக சித்திரவதை செய்து அடித்து துன்புறுத்தி கொலை செய்த  வட மாநிலத்தைச் சேர்ந்த சைக்கோ கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    Husband beaten wife

    அம்பத்தூரில் உள்ள நேரு தெருவில் வசித்து வருபவர் ஹரிஷ் பிரம்மா (26). இவரது மனைவி ரஷியா கத்துனா (22).

    உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்தத் தம்பதியினருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சென்னை அம்பத்தூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கி வசித்து வருகின்றனர்

    பிரம்மா அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று வேலை செய்து வந்தார்.

    ரஷியா அடிக்கடி வேறு சில ஆண்களுடன் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கடந்த மாதம் ஏப்ரல், 29-ம் தேதி ரஷியா செல்போனில் பேசுவது தொடர்பாக கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த ஹரீஸ் பிரம்மா, மனைவியை கட்டையால் தாக்கிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார்.

    பின்னர் அவர் வீடு திரும்பியபோது ரஷியா மயக்க நிலையில் இருந்துள்ளார்.

    உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஹரீஸ் பிரம்மா, கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக டாக்டரிடம் கூறியுள்ளார்.

    முதலுதவி அளித்த டாக்டர்கள், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி தெரிவித்தனர்

    இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி  ரஷியா கத்துனா உயிரிழந்தார். இதனால் கணவன் பிரம்மா தலைமறைவானார்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த கணவன் பிரம்மாவை கைது செய்துள்ளனர்.

    தன் மனைவி அழகாக இருக்கிறார் என யாரேனும் கூறினால் அது தனக்கு பிடிக்காது.

    அதனால்தான் தன் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு யாரிடமும் பேச வேண்டாம் எனக் கூறி சித்திரவதை செய்ததாகவும் தான் செய்த குற்றத்தை பிரம்மா ஒப்புக் கொண்டார்.

    அதனையடுத்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!