Connect with us

    காதலித்து திருமணம் செய்த மனைவியை உயிருடன் மண்ணில் புதைத்து கொன்ற கொடூர கணவன்; நெஞ்சை உறைய வைக்கும் திகில் சம்பவம்..!

    Husband buried wife

    Tamil News

    காதலித்து திருமணம் செய்த மனைவியை உயிருடன் மண்ணில் புதைத்து கொன்ற கொடூர கணவன்; நெஞ்சை உறைய வைக்கும் திகில் சம்பவம்..!

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, காதல் மனைவியை உயிருடன் புதைத்து கொன்ற கணவர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

    Husband buried wife

    வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே வடுகன்தாங்கலை சேர்ந்தவர் விநாயகம், வயது.30.

    இவர் ஆம்பூரிலுள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றியபோது, குடியாத்தத்தை சேர்ந்த சுப்ரஜா, 24, என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது.

    இதுகுறித்து இருவரின் வீட்டாருக்கும் தெரியவர, வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

    எனினும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியே வந்த சுப்ரஜா, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக, சுப்ரஜாவிடமிருந்து போன் வராததால், அவரது தந்தை பாலசுப்பிரமணி, விநாயகத்தை சநதித்து கேட்டுள்ளார்.

    அப்போது தன்னிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டதாக அவர் கூறியுள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த சுப்ரஜாவின் பெற்றோர் கேவி குப்பம் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசாரின் விசாரணையில் விநாயகம், அவரது தம்பி விஜய், 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து சுப்ரஜாவை உயிருடன் புதைத்து கொன்றது தெரியவந்தது.

    இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர், விநாயகம் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு,

    நானும், சுப்ரஜாவும் காதல் திருமணம் செய்து கொண்டோம்.

    இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக திருமணமான பெண் ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் அது தகாத உறவாக மாறியது. இதனால் சுப்ரஜா என்னை கண்டித்தார், இதனால் கோபமடைந்த நான் அவளை அடித்தேன்.

    இதில் சுப்ரஜாவின் உடல்நிலை பாதிப்படைந்தது, அவள் இல்லாமல் இருந்தால் தான் நான் சந்தோஷமாக வாழ முடியும் என நினைத்தேன்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனது தம்பி விஜய் மற்றும் உறவினர் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து சர்க்கார் தோப்பு வனப்பகுதியில் சவக்குழி தோண்டினோம்

    அதற்கு மறுநாள் எனக்கும் சுப்ரஜாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கைகளால் தாக்கியதில் அவர் காயம் அடைந்தார்.

    அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறினேன். அதை நம்பி அவரும் என்னுடன் வந்தார். அவரை சர்க்கார் தோப்பு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றேன்.

    அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி விஜய் மற்றும் 17 வயது சிறுவன் இருவரும் தயாராக இருந்தனர். 3 பேரும் சேர்ந்து சுப்ரஜாவை தாக்கினோம் அவர் மயங்கி விழுந்தார்.

    ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் அவரை உயிருடன் புதைத்துக் கொன்றோம். பின்னர் எதுவும் நடக்காததுபோல் அங்கிருந்து புறப்பட்டு வந்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!