Connect with us

    “உங்களால முடியுமா?” – சவால் விட்ட மனைவி; ஜெயித்து காட்டிய கணவர்; என்ன சவால் தெரியுமா..??

    Husband carries wife

    Viral News

    “உங்களால முடியுமா?” – சவால் விட்ட மனைவி; ஜெயித்து காட்டிய கணவர்; என்ன சவால் தெரியுமா..??

    திருப்பதி கோவிலுக்கு மலைப்படிக்கட்டுகளில் தன்னை தோளில் தூக்கிச் செல்ல முடியுமா என சவால் விட்ட மனைவியை அவரது சவாலை ஏற்று தன்னுடைய தோளில் கணவர் தூக்கி சென்ற சம்பவம் மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Husband carries wife

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடிய புலங்காவை சேர்ந்தவர் வரதவீர வெங்கட சத்தியநாராயணா. அவருடைய மனைவி லாவண்யா.

    இவர்கள் திருமலை திருப்பதிக்கு நடைபயணமாக நேர்த்திக்கடன் செலுத்த தனது மனைவியுடன் சென்றுள்ளனர்.

    மலை படிக்கட்டுகளில் கணவர் சத்யநாராயணா வேகமாக படியேறுவதை கவனித்த லாவண்யா, முடிந்தால் என்னை தூக்கி தோள் மீது வைத்துக்கொண்டு படியேறுங்கள் என சவால் விட்டுள்ளார்.

    மனைவியின் சவாலை ஏற்ற சத்யநாராயணா, அவரை தோள் மேல் சுமந்து கொண்டு படி ஏற துவங்கினார்.

    மனைவியை சுமந்து கொண்டு கணவன் ஒருவர் ஏழுமலையானை தரிசிக்க படியேறி செல்வதை பார்த்த பக்தர்கள் சிலர் அதனை வீடியோ எடுத்தனர்.

    சுமார் 70 படிகள் மனைவியை சுமந்து ஏறினார். பின்னர் லாவண்யா கணவர் தோள் மீதிருந்து இறங்கினார்.

    சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!